‘நகரமன்றத்தை நிர்வகிக்க மாற்றுவழியை கண்டறிய வேண்டிய நிலை ஏற்பட்டது’

மே 2011 பொதுத் தேர்­த­லுக்­குப் பிறகு சில நாட்­க­ளி­லேயே அல்­ஜு­னி­ட் குழுத்­தொ­கு­தியை நிர்­வ­கித்த முக­வர்­கள் ஒப்­பந்­தத்தை முறித்­துக் கொண்டு வெளி­யேற விரும்­பு­வ­தாக லோ தியா கியாங் போன்ற பாட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­னர்­கள் திட­மாக நம்­பி­னர்.

இதன் கார­ண­மாக அக்­கட்­சி­யின் புதிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் புதிய மாற்று வழி­க­ளைக் கண்­ட­றிய வேண்­டி­யி­ருந்­தது.

எதிர்க்­கட்சி வசம் வந்த அல்­ஜு­னிட்-ஹவ்­காங் நகர மன்றத்தை நிர்­வ­கிக்க முக­வர்­க­ளுக்கு விருப்­ப­மில்லை என்று நம்­பி­ய­தாலேயே நகர மன்­றத்­துக்கு எந்­த­வித இடை­யூ­று­களும் ஏற்­ப­டா­மல் இருக்க பாட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­னர்­கள் புதிய திட்­டத்தை வகுக்க வேண்­டி­யி­ருந்­தது என்று மேல் முறை­யீட்டு நீதி­மன்­றம் எழுத்­து­பூர்­வ­மான தீர்ப்­பில் தெரி­வித்­தது.

இந்த நிலை­யில் நிர்­வாக முக­வர்­க­ளுக்­கான ஒப்­பந்­தப்புள்ளி கோராமல் செயல்­பட அவர்­கள் நேர்­மை­யு­டன் முடிவு எடுத்­த­னர். இதை­ய­டுத்து பாட்­டா­ளிக் கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளால் நடத்­தப்­படும் எஃப்எம் சொல்­யூ­ஷன்ஸ் அண்ட் சர்­வி­சஸ் என்ற நிறு­வ­னத்­துக்கு ஓராண்­டுக்­கான முதல் ஒப்­பந்­தம் 2011 ஆகஸ்ட் 1ஆம் தேதி வழங்­கப்­பட்­டது.

இத­னால் நகர மன்­ற சட்­டப்­படி பாட்­டா­ளிக் கட்சி தலை­வர்­களை தனிப்பட்ட முறையில் இதற்கு பொறுப்பு ஏற்கச் செய்ய முடி­யாது என்று உச்ச நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது.

ஆனால் நகர மன்றத்தை நிர்வகித்த முகவருக்கு பணம் வழங்கும் முறையில் அல்ஜுனிட்- ஹவ்காங் நகர மன்றத்தில் தொடர்புடைய பாட்டாளிக் கட்சித் தலைவர்கள் கவனக்குறைவாக நடந்துகொண்டனர் என்று மேல் முறையீட்டு நீதிமன்றம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!