அறிவியல், தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பில் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அழைப்பு அணிசேரா பன்னாட்டு ஒத்துழைப்பு தேவை

அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யி­லான பதற்­றத்­தால் உல­கில் பல்வேறு பிளவுகள் ஏற்­பட்­டுள்­ள­போ­தும், அறி­வி­யல் தொழில்­நுட்­பத்­ துறைகளின் தொடர்பில் உல­க­நாடு­கள் ஒத்­து­ழைக்க வழி இருப்­ப­தாக வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் கூறி­யுள்­ளார்.

அறி­வி­யல், தொழில்­நுட்­பம், விநி­யோ­கச் சங்­கி­லி­கள் ஆகி­ய­வற்­றில் புதிய அணிசேரா இயக்­கம் உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்று அவர் அழைப்பு விடுத்­தார். இரு பேர­ர­சு­க­ளுக்கு இடையே உண்­மை­யாக தொழில்­நுட்ப, பொரு­ளி­யல் ரீதி­யான பிளவு ஏற்­பட்­டால், பெரும் சேதம் உண்­டா­க­லாம் என்ற அவர், அதை எதிர்­கொள்ள அந்த இயக்­கம் உத­வும் என்­றார் அமைச்­சர்.

நேற்று முன்­தி­னம் நடந்த நெக்ஸ்ட் ஸ்டெப் (பொரு­ளி­யல் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு) உல­க­ளா­விய மாநாட்­டில் டாக்­டர் விவி­யன் கலந்­து­கொண்டு பேசி­னார்.

அனைத்­து­ல­கப் பொரு­ளி­ய­லுக்­கான பீட்­டர்­சன் கழ­கம், லீ குவான் இயூ பொதுக் கொள்­கைப் பள்ளி ஆகிய இரண்டு கொள்கை ஆய்வு நிலை­யங்­களும் மாநாட்டை நடத்­து­கின்­றன. ராஃபிள்ஸ் ஹோட்­ட­லில் நேற்று முன்­தி­னம் தொடங்­கிய மாநாடு இன்று நிறை­வு­பெ­றும்.

அந்த அணிசேரா இயக்­கம் தற்­போ­தைய கால­கட்­டத்­தில் பன்­மு­னைத் தன்­மை­யும் வெளிப்­ப­டை­யா­ன­தா­க­வும் விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்­டதாகவும் இருக்­கும் என்று அடாக்­டர் விவி­யன் கூறி­னார்.

"வெளிப்­ப­டை­யான அறி­வி­ யலுக்­குக் கடப்­பாட்­டு­டன், அறி­வு­சார் சொத்­தின் நியா­ய­மான பகிர்­த­லும் பய­ன­டை­த­லும், இருக்க வேண்­டும். நாம் சார்ந்துள்ள அணியை வைத்து நம்மை மதிப்­பி­டா­மல், புத்­தாக்­கம், நம்­ப­கத்­தன்மை ஆகி­ய­வற்­றில் சிறந்து விளங்­கு­வ­தில் போட்­டி­யி­டும் கட்­ட­மைப்­பும் அதில் இருக்க வேண்­டும்," என்று டாக்­டர் விவி­யன் குறிப்­பிட்­டார்.

பழைய அணிசேரா நாடு­கள் இயக்­கத்­தில் 120 நாடு­கள் பங்கு வகித்­தன. அந்த அமைப்பு, இந்­தியா உள்­ளிட்ட நாடு­க­ளால் தொடங்­கப்­பட்­டது. அமெ­ரிக்­கா­வுக்­கும் அப்­போ­தைய சோவி­யத் யூனி­ய­னுக்­கும் அவற்­றின் கூட்­டணி நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான பனிப்­போர் உச்­சத்­தில் இருந்த 1961ஆம் ஆண்டு, அந்­நா­டு­கள் அதில் கலந்­து­கொள்­ளா­மல் வேறு திசை­யில் பய­ணிக்க விரும்­பின. அணிசேரா நாடு­கள் இயக்­கத்­தில் சிங்­கப்­பூர் 1970ஆம் ஆண்டு இணைந்­தது.

புதி­தாக அணிசேரா நாடு­கள் இயக்­கத்­தைத் தொடங்க இன்­னும் காலம் கனியவில்லை. இருப்பினும் பிற நாடு­க­ளுக்கு செயல்­படும் தன்­ன­தி­கா­ரம் உள்­ளது என்­ப­தை­யும் அவை முடிந்­த­வரை எந்த அணியையும் சார்ந்திருக்க மறுக்கும் என்­ப­தை­யும் எடுத்­துச்­சொல்­லவே இந்த யோச­னையை முன்­வைத்­த­தாக டாக்­டர் விவி­யன் கூறி­னார்.

"சுய­ம­ரி­யாதை உள்ள எந்த ஆசிய நாடும் சிக்­கிக் கொள்­ள­வும் அடி­மை­யாக இருக்­க­வும் தங்­களை வைத்து மறை­மு­கப் போர்­கள் நடத்­தப்­ப­டு­வ­தை­யும் விரும்­பாது என்று நினைக்­கி­றேன். அத­னால் மற்ற உலக நாடு­க­ளின் இந்த விருப்­பத்­துக்­கான கார­ணங்­களை நான் முன்­வைக்­கி­றேன்," என்­றார் டாக்டர் விவியன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!