ஆசிரியர்களின் மேம்பாட்டுக்கு உதவியோருக்கு விருதுகள்

மோன­லிசா

கல்வி அமைச்­சில் பணி­யாற்­றும் ஊழி­யர்­க­ளின் நிபு­ணத்­துவ மேம்­பாட்­டிற்­காக பங்­காற்­றிய சிறந்த அதி­கா­ரி­க­ளுக்­கும் பங்­கா­ளி­க­ளுக்­கும் சிங்­கப்­பூர் ஆசி­ரி­யர்­கள் கழ­கம் விரு­து­கள் வழங்கி சிறப்­பித்­துள்­ளது.

கல்வி அமைச்சு ஊழி­யர்­க­ளின் கற்­றல் திறன்­க­ளை­யும் கற்­பித்­தல் முறை­களில் புத்­தாக்க சிந்­த­னை­யை­யும் ஊக்­கு­விக்­கும் வண்­ணம் ஆண்­டு­தோ­றும் நடத்­தப்­படும் விழா­வில் இவ்­வாண்டு மொத்­தம் 539 விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

ஆசி­ரி­யர் கழ­கத்­தின் புல­மைப் பிரி­வில் விருது பெற்ற மூவ­ரில் 47 வயது முதன்மை கணித ஆசி­ரி­யர் முனை­வர் ராதா தேவி­யும் ஒரு­வர்.

கடந்த 24 ஆண்­டு­க­ளாக ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரிந்­து­வ­ரும் இவர் தமது அனு­ப­வங்­க­ளை­யும் கற்­பித்­தல் முறை­க­ளை­யும் கற்­றல் சமூ­கத் தொடர்பு வட்­டம் மூலம் பல்­வேறு ஆசி­ரி­யர்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்­கி­றார்.

இக்­கற்­றல் சமூ­கங்­க­ளின் வழி பல்­வேறு பயிற்­சிப் பட்­ட­றை­களும் தொழில்­துறை மேம்­பாட்டு பகிர்வு நிகழ்­வு­க­ளை­யும் முனை­வர் ராதா நடத்­தி­யுள்­ளார்.

மேலும் இவர் 'எஸ்ஜி லர்­னிங் டிசை­னர்ஸ் சர்­கிள்' (SG Learning Designers Circle) எனும் கற்­றல் வடி­வ­மைப்­பா­ளர்­கள் வட்­டத்­தின் மூலம் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான ஃபேஸ்புக் சமூக ஊட­கப் பக்­கத்­தில் பல்­வேறு புத்­தாக்க கற்­பித்­தல் வழி­மு­றை­க­ளைப் பதி­வேற்றி வரு­கி­றார்.

"ஒரு வகுப்­ப­றை­யில் உள்ள மாண­வர்­க­ளுக்கு கற்­றுக்­கொ­டுப்­பது அவர்­க­ளுக்கு மட்­டுமே பயன்­படும். ஆனால் சக ஆசி­ரி­யர்­க­ளுக்கு கற்­றுக்­கொ­டுப்­பது பல மடங்கு மாண­வர்­க­ளைச் சென்­ற­டை­யும்," என்று இவர் கூறி­னார்.

ஆசி­ரி­ய­ராக இருப்­பது தமக்கு மிகுந்த மன­நி­றைவை அளிப்­ப­தா­கக் குறிப்­பிட்ட திரு­வாட்டி ராதா, தம்­மு­டைய பள்ளி, கல்­லூரி, பல்­க­லைக்­க­ழக ஆசி­ரி­யர்­க­ளைப் பார்த்தே ஆசி­ரி­ய­ராக வேண்­டும் என்ற ஆசை ஏற்­பட்­ட­தா­க­வும் சொன்­னார்.

சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் கணி­தத் துறை­யில் பட்­டம் பெற்ற இவர், 32 வய­தி­லேயே அத்­து­றை­யில் முனை­வர் பட்­டம் பெற்­றார்.

தற்­போது ஹை சிங் கத்­தோ­லிக்க பள்­ளி­யில் முதன்மை கணித ஆசி­ரி­ய­ராக பணிப்­பு­ரி­யும் இவ­ரைப் பலர் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் கற்­பிக்­கும்­படி ஊக்­குவித்த­னர்.

ஆனால் பள்ளி மாண­வர்­களை மெரு­கேற்­று­வதே பக்­கு­வப்­பட்ட இளைய சமூ­கத்தை உரு­வாக்­கும் என்ற நோக்­கில் பள்ளி ஆசி­ரி­ய­ரா­கவே தொடர விரும்­பு­கி­றார்.

இம்­மாதம் 3ஆம் தேதி ஸூம் மெய்­நி­கர் தளம்­வழி நடை­பெற்ற விருது விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்ட கல்வி அமைச்­சர் சான் சுன் சிங், "திறன் வாய்ந்த மாண­வர்­களை உரு­வாக்க ஆசி­ரி­யர்­க­ளின் தர மேம்­பாடு அத்­தி­யா­வ­சி­ய­மான ஒன்று.

"இன்­றைய கல்­வித்­துறை தேவை­க­ளுக்­கேற்ப ஆசி­ரி­யர்­கள் தொழில்­நுட்­பம் உள்­ளிட்ட பல்­வேறு துறை­களில் வளர்ச்­சி­ய­டைய வேண்­டும்," என்று வலி­யு­றுத்­தி­னார்.

ஆசி­ரி­யர்­கள் கழ­கம், பள்­ளிக்கு அப்­பால் ஆசி­ரி­யர்­க­ளின் மேம்­பாட்­டிற்கு உழைத்­த­வர்­க­ளுக்­காக 'ஆசி­ரி­யர் கழ­கத்­தின் தோழர்' எனும் 512 விரு­து­க­ளை­யும் இவ்­வாண்டு வழங்­கி­யது.

அத்­து­டன் பங்­கா­ளித்­துவ நிறு­வ­னங்­க­ளுக்கு 24 விரு­து­களும் வழங்­கப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!