செய்திக்கொத்து

எஸ்ஐஏ விமானத்தில்

தகராறு செய்த பயணி

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த பயணி பலமுறை மது வேண்டும் என்று கேட்டதோடு தகாத வார்த்தைகளால் விமான சிப்பந்தியைத் திட்டியதால், சாங்கி விமான நிலையத்தில் துணை காவல் படையிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை அன்று, பேங்காக்கிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில், அந்த ஆடவர் விமான சிப்பந்தியிடம் அவதூறாகப் பேசினார். அந்த பயணி மற்ற பயணிகளுக்கு எரிச்சலையும் சிரமத்தையும் ஏற்படுத்தியதாகவும், மற்ற சிப்பந்திகளின் அறிவுறுத்தலுக்கு இணங்கவில்லை என்று கூறப்பட்டது. இந்த சம்பவத்தை 'டிக்டாக்' சமூக ஊடகத்தில் வேறொரு பயணி பதிவுசெய்துள்ளார். இந்த காணொளி 1.8 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளுக்கும் எஸ்ஐஏ மன்னிப்பு கேட்டுள்ளது.

போதைப்பொருள் கலந்த இருமல் மருந்து: விசாரணையில் மருத்துவர்

நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நிரபராதி என்று தீர்ப்பளித்து 2020 ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட மருத்துவர் வீ தியோங் பூ, 71, போதைப்பொருளுக்கு அடிமையான நோயாளிகளுக்கு அதே போதைப்பொருள் கொண்ட இருமல் மருந்தை கொடுத்துள்ளார். நேற்று நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இது தெரியவந்தது. இதில் சிங்கப்பூர் மருத்துவ மன்றம் மருத்துவர் வீயின் பணி இடைநீக்கத்தை 20 மாதங்களிலிருந்து 30 முதல் 36 மாதங்களுக்கு அதிகரிக்குமாறு நீதிமன்றத்திடம் விண்ணப்பித்தது.

கோடீன் கொண்ட இருமல் மருந்தை அதற்கு அடிமையாகும் நோயாளிகளுக்கு கொடுப்பதோடு, அளவுக்கு மீறிய தேவையில்லாத மருந்தை கொடுப்பது போன்ற பல குற்றச்சாட்டுகளை இந்த ஆண்டின் தொடக்கத்தில் எதிர்நோக்கினார் வீ.

பெண்ணாக பாசாங்கு செய்து பாலியல் சேவைக்கு பணம் வாங்கிய ஆடவர்

பாலியல் சேவை வழங்குவதாக சொல்லி, 18 வயது பெண்ணாக பாசாங்கு செய்து இருவரிடம் பணம் வாங்கிய குற்றத்திற்கு ஆடவருக்கு $2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கென்ட் லிம், 24, ஒரு துணை தேடும் செயலி மூலம் 19 மற்றும் 21 வயது ஆடவர்களைத் தொடர்புகொண்டார். இணையத்தில் கிடைத்த பெண்களின் கவர்ச்சிகரமான புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பினார். உடலுறவு சேவைக்கு இவர்களிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டார். பணம் வாங்கிய பின்பு, அவர்களுடன் இருந்த தொடர்பை துண்டித்து, எல்லா ஆதாரங்களையும் லிம் அழிக்க முயற்சி செய்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!