செய்திக்கொத்து

மூன்றாம் காலாண்டில் 100%க்கு மேல் லாபம் ஈட்டிய 'ஜென்டிங் சிங்கப்பூர்'

'ஜென்டிங் சிங்கப்பூர்' நிறுவனம் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 100 விழுக்காட்டிற்கும் அதிகமான நிகர லாபம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 135.8 மில்லியன் வெள்ளி. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் அது 60.7 மில்லியன் வெள்ளியாக இருந்தது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நிறுவனம் 44.1 மில்லியன் வெள்ளி நிகர லாபம் ஈட்டியது.

கொவிட்-19 கிருமிப்பரவலின் தாக்கத்திலிருந்து மீண்டுவரும் நிலையில் வருவாய் அதிகரித்திருப்பதாக 'ஜென்டிங் சிங்கப்பூர்' குறிப்பிட்டது. வட்டாரப் பயண நிலவரம் மேம்பட்டிருப்பதாகவும் சிங்கப்பூரில் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அது கூறியது.

டாக்சி ஓட்டுநரை மிரட்டியவருக்கு ஆறு வாரச் சிறைத்தண்டனை

டாக்சி ஓட்டுநரைத் தகாத வார்­தைக­ளால் திட்டி, டாக்­சியை சேதப்­ப­டுத்­தி­யதை ஒப்புக்கொண்ட 31 வய­தான ஜோயல் டான் கிங் வெய்க்கு ஆறு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தன்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டை அவர் ஒப்­புக்­கொண்ட பிறகு, நேற்று அவ­ருக்கு $2,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது. அக்­டோ­பர் 10, 2021ஆம் தேதி சுவா சூ காங்­கில் உள்ள புளோக் 804 பி கீட் ஹாங் குளோஸ் பகு­தி­யில் இந்­தச் சம்­ப­வம் நடந்­தது. 55 வய­தான டாக்சி ஓட்டுநரை, ஒரு தம்­ப­தி­யை­யும் அவர்­க­ளது குழந்­தை­யை­யும் ஏற்­றிக்­கொண்டு செல்­லும்­போது டான் தனது மோட்­டார் சைக்­கிளை முறை­யாக ஓட்டாததால் டாக்சி ஓட்­டு­நர் தன் வாக­னத்­தி­லி­ருந்து ஒலி எழுப்­பி­னார். இதையடுத்து டான் தகாத வார்த்­தை­க­ளால் அவரை ஏசி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!