மோசடிகளில் $13.30 மி. இழப்பு: சிறுமி உட்பட 537 பேரிடம் விசாரணை

மோச­டிச் சம்­ப­வங்­களில் $13.3 மில்­லி­ய­னுக்­கும் மேல் ஏற்­பட்ட இழப்பு தொடர்­பில் 537 சந்­தேக நபர்­க­ளி­டன் காவல்துறையினர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர். அவர்­களுள் 13 வயது சிறு­மி­யும் அடங்­கு­வார். காவல்­துறை அதி­கா­ரி­களும் வர்த்­தக விவ­கா­ரப் பிரிவு அதி­கா­ரி­களும் தீவு முழு­வ­தும் இரு வாரங்­க­ளாக நடத்­திய வேட்­டை­யில் அவர்­கள் சிக்­கி­னர்.

பிடி­பட்­டோர் 13 வய­துக்­கும் 76 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள். அவர்­களில் 185 பெண்­களும் உள்­ள­னர். 1,856 மோச­டிச் சம்­ப­வங்­களில் ஈடு­பட்ட சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் அவர்­க­ளி­டம் விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.

இணைய வர்த்­தக மோச­டி­யில் ஈடு­பட்ட சந்­தே­கம் தொடர்­பில் சிறு­மி­யி­டம் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கிறது.

வேலை மோசடி, இணைய ஊடு­ரு­வல் மோசடி, கடன் மோசடி, சமூக ஊட­கங்­களில் ஆள்­மா­றாட்ட மோசடி, இணை­யக் காதல் மோசடி, சிங்­கப்­பூர் மற்­றும் சீன அர­சாங்க அதி­கா­ரி­க­ளைப்போல நடித்து மோசடி ஆகி­ய­வற்­றி­லும் இவர்­க­ளுக்­குத் தொடர்பு இருக்­க­லாம் என்ற கோணத்­தி­லும் விசா­ரணை நடை­பெ­று­கிறது.

குறிப்­பாக, ஏமாற்­று­தல், கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக்­கு­தல் அல்­லது உரி­மம் இன்றி பணம் கொடுக்­கல் வாங்­க­லில் ஈடு­ப­டு­தல் போன்­ற­வற்­றில் சந்­தேக நபர்­கள் ஈடு­பட்­ட­தா­க­வும் சொல்லப்­ப­டு­கிறது.

பத்து வித­மான மோச­டிச் சம்­ப­வங்­களில் சிங்­கப்­பூ­ரில் இவ்­வாண்­டின் முதல் பாதி­யில் மட்­டும் $227.8 மில்­லி­யன் பறி­போ­ன­தாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளி­யிட்டு இருந்­தது. வேலை மோசடி, இணைய ஊடு­ரு­வல் மோசடி, சமூக ஊடக ஆள்­மா­றாட்ட மோசடி மற்­றும் இணை­யக் காதல் மோச­டி­கள் அவற்­றில் குறிப்­பி­டத்­தக்­கவை என்­றும் அச்­செய்தி குறி­பிட்டு இருந்­தது.

வேலை மோசடி தொடர்­பாக மட்­டும் 3,500க்கும் மேற்­பட்ட புகார்­கள் பதி­வாகி உள்­ளன. இந்த மோச­டி­களில் பொது­மக்­கள் இழந்த தொகை $58 மில்­லி­யன்.

இதற்­கி­டையே, இணைய ஊடு­ரு­வல் முறி­ய­டிப்பு செயற்­குழு கடந்த புதன்­கி­ழமை சில தக­வல்­களை வெளி­யிட்­டது. இணை­யம் வழி ஊடு­ருவி மோச­டி­யில் ஈடு­படும் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை இவ்­வாண்­டின் இரண்­டாம் காலாண்­டில் இது­வரை இல்­லாத உச்­சத்­தைத் தொட்­ட­தாக அந்­தக் குழு கூறி­யது.

மேலும், இவ்­வாண்டு ஏப்­ர­லுக்­கும் ஜூனுக்­கும் இடை­யில் ஆக உச்­ச­மாக 1.09 மில்­லி­யன் தனித்­துவ ஊடு­ரு­வல் தளங்­கள் கண்­டு ­பி­டிக்­கப்­பட்­ட­தா­க­வும் அது தெரி­வித்­தது.

இந்த எண்­ணிக்கை ஜன­வ­ரிக்­கும் மார்ச்­சுக்­கும் இடை­யில் 1.02 மில்­லி­ய­னா­க­வும் அதற்கு முந்­திய காலாண்­டான 2021 அக்­டோ­ப­ருக்­கும் டிசம்­ப­ருக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் 888,000 ஆக­வும் இருந்­தது. அதி­கா­ரத்­துவ நிறு­வ­னம் போல­வும் அதி­காரி போல­வும் நடித்து, பொது­மக்­க­ளின் தனிப்­பட்ட தக­வல்­க­ளைப் பெற இந்த ஊடு­ரு­வல் தளங்­களை மோச­டிக்­கா­ரர்­கள் பயன்­ப­டுத்­து­வது வழக்­கம்.

மோச­டிக் குற்­றங்­க­ளுக்கு பத்­தாண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­டக்­கூ­டும். கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக மாற்­றும் குற்­றத்­திற்கு பத்­தாண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் $500,000 வரை­யி­லான அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம். அதே­போல உரி­மம் இன்றி பணம் அனுப்­பும் சேவை நடத்­தும் குற்­றத்­திற்கு மூன்­றாண்டு வரை­யி­லான சிறைத் தண்­டனை, $125,000 வரை­யி­லான அப­ரா­தம் ஆகி­யன விதிக்­கப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!