முகக்கவசம் அணியுமாறு சொன்ன பேருந்து ஓட்டுநரின் முகத்தில் குத்திய ஆடவர் கைது

பேருந்­தில் பய­ணம் செய்­த­போது முகக்­க­வ­சம் அணி­யும்­படி அறி­வுறுத்­திய எஸ்­பி­எஸ் டிரான்­சிட் பேருந்து ஓட்­டு­ந­ரைத் தாக்­கிய ஆட­வர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு கைது­செய்­யப்­பட்­டார்.

சேவை எண் 154 கொண்ட அந்­தப் பேருந்தை ஓட்­டி­ய திரு அதிப், மற்ற பய­ணி­க­ளின் பாது­காப்பை முன்­னிட்டு முகக்­க­வ­சம் அணி­யும்­படி அந்த ஆட­வ­ரி­டம் திரு அதிப் கூறி­னார்.

ஆனா­லும், அந்த ஆட­வர் அதற்­குச் செவி­ம­டுக்­க­வில்லை. இது­பற்­றிப் பேருந்­துச் செயல்­பாட்டு மையத்­திற்­குத் திரு அதிப் தக­வல் தெரி­வித்த பிறகே அந்த ஆட­வர் முகக்­க­வ­சத்தை அணிந்­தார்.

பேருந்­துச் சந்­திப்பு நிலை­யத்தை அப்­பே­ருந்து அடைந்­த­தும் அந்த ஆட­வர், திரு அதிப்­பின் முகத்­தில் குத்­து­விட்­டார். இத­னால் திரு அதிப்­பின் முகத்­தில் பல காயங்­கள் ஏற்­பட்­டன. இதில் அவ­ரின் மூக்கு உடைந்­தி­ருக்­க­லாம் என்­றும் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

இதைக் கண்­ட­தும் பேருந்­தில் இருந்த பய­ணி­களில் இரு­வர் உத­விக்கு விரைந்­த­னர். காவல்­து­றை­யி­னர் வரும்­வரை அவர்­கள் அந்த ஆட­வ­ரைப் பிடித்­துக்­கொண்­ட­னர்.

காய­ம­டைந்த திரு அதிப், சாங்கி பொது மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­ற­பின் வீட்­டில் ஓய்­வில் இருப்­ப­தாக நேற்று முன்­தி­னம் மாலை­யில் எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வ­னம் ஃபேஸ்புக் வழி­யா­கத் தெரி­வித்தது.

தேசிய போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­கள் சங்­கத்­தின் நிர்­வா­கச் செய­லா­ளர் மெல்­வின் யோங், நேற்று முன்­தி­னம் பிற்­ப­க­லில் திரு அதிப்பை நேரில் சென்று பார்த்­தார்.

அவ­ரது மருத்­து­வச் செல­வு­கள் அனைத்­தை­யும் நிறு­வ­னமே ஏற்­றுக்­கொள்­வது தொடர்­பில் சங்­கம், நிறு­வ­னத்­து­டன் அணுக்­க­மா­கச் செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் திரு யோங் தெரி­வித்­துள்­ளார்.

"பொதுப் போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­க­ளுக்கு எதி­ரான எத்­த­கைய வன்­முறை, குற்­றச் செயல்­க­ளை­யும் தேசிய போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­கள் சங்­கம் வன்­மை­யா­கக் கண்­டிக்­கிறது," என்­றும் அவர் தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்டு இருக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!