விற்பனைக்கு விடப்படும் 9,500 பிடிஓ வீடுகள்

பத்து பிடிஓ திட்­டங்­கள் இம்­மா­தம் வீட­மைப்பு வளர்ச்­சி­க் கழ­கத்­தால் விற்­ப­னைக்கு விடப்­ப­டு­கின்­றன. இந்­தத் தேவைக்கு ஏற்ப கட்­டப்­படும் வீட்டுத் திட்­டங்­களில் மூன்று, முதன்மை வட்­டா­ரப் பொது வீட­மைப்­புத் திட்­டத்தின்கீழ் கட்­டப்­படும்.

உலு பாண்­டான் பேங்க்ஸ், கிம் மோ நேச்­சுரா ஆகிய இரண்டு பிடிஓ திட்­டங்­கள் முதிர்ச்சி அடைந்த குடி­யி­ருப்­புப் பேட்­டை­யான குவீன்ஸ்­ட­வு­னில் கட்­டப்­ப­டு­கின்­றன. மூன்­றா­வது வீட­மைப்­புத் திட்­ட­மான காலாங் ஹொராய்­சன், காலாங் வாம்போ வட்­டா­ரத்­தில் கட்­டப்­ப­டு­கிறது. காலாங் வாம்போ வட்­டா­ர­மும் முதிர்ச்சி அடைந்த வட்­டா­ர­மா­கும்.

இந்த வீடு­க­ளுக்­கான விற்­பனை இம்­மா­தம் 23ஆம் தேதி­யன்று தொடங்­கு­கிறது. 9,500க்கும் மேற்­பட்ட வீடு­களை வீவக விற்­ப­னைக்கு விடு­வ­தாக தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டார்.

புதிய முதன்மை வட்­டா­ரப் பொது வீட­மைப்பு திட்­டங்­களில் வீடு­களை வாங்­கு­வோர், எதிர்­கா­லத்­தில் அவற்றை விற்­கும்­போது மறு­விற்­பனை விலை அல்­லது சந்தை விலை­யில் (இவ்­வி­ரண்­டில் எது அதி­க­மா­னதோ அதைச் செலுத்த வேண்­டும்) 6 விழுக்­காட்டை வீவ­க­வி­டம் செலுத்த வேண்­டும். பொது­வாக, புதிய வீவக வீடு­கள் அல்­லது மறு­விற்­பனை வீடு­களை வாங்­கிய பிறகு, குறைந்­த­பட்­சம் ஐந்து ஆண்­டு­கள் கழித்­து­தான் அவற்றை விற்க முடி­யும். ஆனால் முதன்மை வட்­டா­ரப் பொது வீட­மைப்­புத் திட்­டங்­க­ளின்­கீழ் வீடு­களை வாங்­கு­வோர் குறைந்­த­பட்­சம் பத்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகே அவற்றை விற்க முடி­யும்.

குவீன்ஸ்­ட­வுன் வட்­டா­ரத்­தில் கட்­டப்­படும் குவீன்ஸ்வே கெனப்பி வீட­மைப்­புத் திட்­டம், முதன்மை வட்­டா­ரப் பொது வீட­மைப்­புத்

திட்­டத்­தின்­கீழ் வராது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. முதன்மை போக்கு­வ­ரத்து வச­தி­கள், முக்­கிய சில்­லறை வர்த்­தக வச­தி­கள் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து அது தூர­மாக இருப்­பதே இதற்­குக் கார­ணம் என்று அமைச்­சர் லீ தெரி­வித்­தார்.

எனவே, உலு பாண்­டான் பேங்க்ஸ், கிம் மோ நேச்­சுரா ஆகி­ய­வற்­றில் உள்ள வீடு­க­ளின் விலை­யை­விட குவீன்ஸ்வே கெனப்­பி­யில் உள்ள வீடு­க­ளின் சந்தை விலை குறை­வாக இருக்­கும் என்று திரு லீ கூறி­னார்.

இருப்­பி­னும், குவீன்ஸ்வே கெனப்பி குடி­யி­ருப்­பா­ளர்­கள் தங்­க­ளுக்­குத் தேவை­யான அத்­தி­யா­

வ­சி­யப் பொருள்­களை வாங்க பேரங்­கா­டி­களும் உணவு நிலை­யங்­கள் இருக்­கும் என்­றார் அவர்.

புதி­தா­கக் கட்­டப்­படும் மூன்று முதன்மை வட்­டா­ரப் பொது வீட­மைப்­புத் திட்­டங்­கள் டோவர், போன விஸ்டா, காலாங் ஆகிய எம்­ஆர்டி நிலை­யங்­க­ளுக்கு அரு­கில் அமையும் என்­றார் திரு லீ. அங்கு வசிக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு தேவை­யான வச­தி­கள் ஏற்­கெ­னவே அவ்­வட்­டா­ரத்­தில் இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

"இந்த வீடு­கள் முதன்மை இடத்­தில் இருப்­ப­தா­லும் வச­தி­க­ளுக்­குப் பஞ்­ச­மில்லை என்­ப­தா­லும் அவற்­றின் விலை அதி­க­மாக இருக்­கும். முதன்மை வட்­டா­ரப் பொது வீட­மைப்பு வீடு­க­ளின் விலை கட்­டுப்­ப­டி­யா­ன­தாக இருப்­பதை உறுதிசெய்ய கூடு­தல் மானி­யம் வழங்­கப்­ப­டு­கிறது. அனைத்து பிடிஓ வீடு­க­ளுக்கு வழங்­கப்­படும் மானி­யத் தொகை­யை­விட இந்த வீடு­க­ளுக்­குக் கூடு­தல் மானி­யம் வழங்­கப்­

ப­டு­கிறது," என்று அமைச்­சர் லீ தெரி­வித்­தார்.

உலு பாண்­டான் பேங்க்ஸ் டோவர் வனப்­ப­கு­தி­யின் கிழக்­குப் பகு­தி­யில் அமைந்­துள்­ளது. அப்­

ப­கு­தி­யில் கார்­கள் அதி­கம் போக முடி­யா­த­படி ஏற்­பா­டு­கள் செய்­யப்­படும். எனவே, வாகன நிறுத்­து

­மி­டங்­கள் குறை­வாக இருக்­கும். இத­னால் பொது­மக்­க­ளுக்­குத் தேவை­யான வச­தி­க­ளைச் செய்து தர கூடு­தல் இடங்­கள் இருக்­கும் என்று தெரி­விக்­க­பட்­டது.

இதற்­கி­டையே, இம்­மா­தம் 23ஆம் தேதி­யன்று புக்­கிட் பாத்­தோக், தெங்கா, ஈசூன் ஆகிய வட்­டா­ரங்­க­ளி­லும் பிடிஓ வீடு­கள் விற்­

ப­னைக்கு விடப்­படும்.

தெங்­கா­வில் இரண்டு வீட­மைப்­புத் திட்­டங்­கள் விற்­ப­னைக்கு விடப்­ப­டு­கின்­றன. அவற்­றில் மொத்­தம் 2,070 வீடு­கள் உள்­ளன. இத்­திட்­டங்­களில் உத்­த­ர­மில்லா வீடு­க­ளுக்­கான சோத­னைத் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

வீடு­க­ளைத் தங்­கள் விருப்­பம்­போல வடி­வ­மைத்­துப் புதுப்­பிக்க குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குக் கூடு­தல் தெரி­வு­க­ளைத் தரும் நோக்­கில் இந்த அணு­கு­முறை கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கிறது. புக்­கிட் பாத்­தோக்­கில் ஒரு பிடிஓ வீட­மைப்­புத் திட்­ட­மும் ஈசூ­னில் மூன்று பிடிஓ வீட­மைப்­புத் திட்­டங்­களும் இடம்பெற உள்ளன.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காலாங் வாம்போ, குவீன்ஸ்டவுன், தெங்கா போன்ற குடியிருப்புப் பேட்டைகளில் ஏறத்தாழ 2,900லிருந்து 3,900 பிடிஓ வீடுகள் வரை விற்பனைக்கு விடப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!