சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சாரப் பேருந்து

மின்­க­லங்­க­ளால் முழு­மை­யாக இயங்­கும் மின்­சா­ரப் பேருந்து

சிங்­கப்­பூ­ரில் தயாரிக்கட்டுள்ளது.

அப்­பே­ருந்து அடுத்த சில வாரங்­களில் சோத­னை ஓட்டத்துக்கு உட்­ப­டுத்­தப்­படும்.

சிங்­கப்­பூ­ரில் மின்­சா­ரப்

பேருந்­து­க­ளைக் கொண்டு பொதுப் போக்­கு­வ­ரத்­துச் சேவை வழங்க அர­சாங்­கம் கடப்­பாடு கொண்­டு

உள்­ளது.

இதை அவற்­றுக்­குச் சாத­க­மாக்­கிக்­கொண்டு மின்­சா­ரப் பேருந்து தயா­ரிப்­பில் இறங்க உள்­ளூர் நிறு­வ­னங்­கள் முனைப்­பு காட்­டு

­கின்­றன.

இந்­நி­லை­யில் 12 மீட்­டர் நீள­முள்ள, மூன்று கத­வு­க­ளைக் கொண்ட வொல்வோ பிசெட்­எல்­டெஸ்சி நியூஸ்­டார் சிட்டி மின்­சா­ரப் பேருந்து நேற்று அறி­மு­கப்­

ப­டுத்­தப்­பட்­டது.

உள்­ளூர் நிறு­வ­ன­மான எஸ்சி ஆட்­டோ­வுக்­கும் சுவீ­ட­னின் வர்த்­தக வாகன உற்­பத்­தி­யா­ளர் வொல்­வோ­வுக்­கும் இடை­யி­லான ஓராண்டு ஒத்­து­ழைப்­புக்­குப் பிறகு இது

சாத்­தி­ய­மா­னது.

இதுவே சிங்­கப்­பூரில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் மின்­

சா­ரப் பேருந்து. உள்­ளூர் பேருந்து தர­நி­லைக்கு ஏற்ப இந்த மின்­சா­ரப் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்­வாண்டு இறு­திக்­குள் இந்­தப் பேருந்து உள்­ளூர் சாலை­களில் சோத­னை ஓட்டத்துக்கு உட்­ப­டுத்­தப்­படும் என்று இரு நிறு­வ­னங்­களும் நேற்று தெரி­வித்­த­ன.

பேருந்­துக்­கான லித்­தி­யம் மின்­

க­லங்­களை வொல்வோ நிறு­வ­னம் வழங்­கி­யது.

பல ஆண்­டு­க­ளா­கத் தனி­யார் பேருந்­து­களைத் தயாரிக்கும் அனு

­ப­வத்­தைக் கொண்ட எஸ்சி ஆட்டோ நிறு­வ­னம் மின்­சா­ரப் பேருந்தை வடி­வ­மைத்து சினோக்­கோ­வில் உள்ள அதன் ஆலை­யில் அதைத் தயாரித்தது.

புதிய மின்­சா­ரப் பேருந்து சில சிறப்பு அம்­சங்­கள் உள்­ளன. பேருந்­துக்­குப் பின்­பு­றத்­தில், அவ­ச­ர­கா­லம் ஏற்­பட்­டால் பய­ணி­கள் வெளி­

யே­று­வ­தற்­கான கத­வும் அதில் அடங்­கும்.

மின்­சா­ரப் பேருந்­தின் 90 விழுக்­காடுப் பாகங்­கள் மறு­சு­ழற்சி செய்யத்தக்கவை என்­பது குறிப்­

பி­டத்­தக்­கது.

அவற்றில் மின்­க­லங்­களும் அடங்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!