ஊழியர்கள், முதலாளிகள் மாறுபட்ட கருத்து, விருப்பம்

பல­வீ­னம் அடைந்­து­வ­ரும் பொரு­ளி­யல் கார­ண­மாக தற்­போது வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் ஊழி­யர்­கள் மீண்­டும் வேலை­யி­டம் திரும்ப வேண்­டும் எனப் பல முத­லா­ளி­கள் நம்­பு­வ­தாக லிங்க்டு­இன் நிறு­வ­னம் நடத்­திய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

தங்­கள் ஊழி­யர்­கள் வேலை­யி­டத்­தில் கூடு­தல் நாள்­கள் பணி­பு­ரிய வேண்­டும் என்று ஆய்­வில் பங்­கெ­டுத்த முத­லா­ளி­களில் 51 விழுக்­காட்­டி­னர் விருப்­பம் தெரி­வித்­துள்­ள­னர்.

இருப்­பி­னும், சில நாள்­கள் வீட்­டி­லி­ருந்­தும் சில நாள்­கள் வேலை­யி­டத்­தி­லும் பணி­பு­ரி­யும் அணு­கு­முறை தொட­ரும் என்று ஆய்­வில் பங்­கெ­டுத்த முத­லா­ளி­களில் 77 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர்.

தனி­மை­யில் வேலை செய்­யும் அணு­கு­முறை குறைந்து வரு­

வ­தாக லிங்க்டு­இன் நிறு­வ­னம் கூறி­யது. அது நடத்­திய ஆய்­வில் சிங்­கப்­பூர் உட்­பட உல­கெங்­கும்­உள்ள பெரிய நிறு­வ­னங்­க­ளின் முத­லா­ளி­கள் பங்­கெ­டுத்­த­னர். 2,900 பேரி­டம் ஆய்வு நடத்­தப்­பட்­டது. சிங்­கப்­பூ­ரில் ஊழி­யர்­கள் தனி­மை­யில் வேலை செய்­யும் பணி­க­ளின் விகி­தம் வெறும் 5.2 விழுக்­காடு. ஆனால் அவற்­றுக்­கான விண்­ணப்­பங்­கள் 7.8 விழுக்­காடு. இந்­நி­லை­யில், பொரு­ளி­யல் பல­வீ­னம் அடைந்து வரு­வ­தால் நீக்­குப்­போக்­கான வேலை அணு­கு­முறை முடி­வுக்கு வரக்­கூ­டும் என்று ஆய்­வில் பங்­கேற்ற உள்­ளூர் முத­லா­ளி­களில் 80 விழுக்­காட்­டி­னர் கூறி­ய­தாக ஆய்வு தெரி­வித்­தது.

ஊழி­யர்­க­ளுக்­கான கற்­றல், மேம்­பாட்டு நிதி­யை­யும் வாய்ப்­பு­

க­ளை­யும் குறைத்த 33 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மான முத­லா­ளி­கள் திட்­ட­மிட்டு வரு­வ­தாக அறி­யப்­ப­டு­கிறது. இது உள்­ளூர் ஊழி­யர்­க­ளின் விருப்­பத்­துக்கு மாறு­பட்­டது. பதவி உயர்வு, நீக்­குப்­போக்­கான வேலை அணு­கு­முறை, திறன் மேம்­பாடு ஆகி­ய­வற்றை உள்­ளூர் ஊழி­யர்­கள் விரும்­பு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், நீக்­குப்­போக்­கான வேலை அணு­கு­மு­றையை முடி­வுக்­குக் கொண்டு வரும் நிறு­வ­னங்­க­ளின் வர்த்­த­கம், நீண்­ட­கால அடிப்­ப­டை­யில் பாதிப்­ப­டை­யும் என்று லிங்க்டுஇன் நிறு­வ­னம் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!