மின்னிலக்க நாணயம் தொடர்பான ஊகங்களை சிங்கப்பூர் ஒருபோதும் ஊக்குவிக்காது: வோங்

மின்னிலக்கச் சொத்துகளில் புத்தாக்கத்தை சிங்கப்பூர் வரவேற்பதாகவும் ஆனால் மின்னிலக்க நாணயம் தொடர்பான ஊகங்களை அது ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை என்றும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.

புளூம்­பெர்க் புதிய பொரு­ளி­யல் கருத்­த­ரங்­கில் அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார். உல­கின் ஆகப் பெரிய மின்­னி­லக்க நாணய நிலை­யங்­களில் ஒன்­றாக சிங்­கப்­பூர் விளங்­கு­வது குறித்து அவ­ரி­டம் கேட்­கப்­பட்­டது. அண்­மைய சம்­ப­வங்­கள் மின்­னி­லக்­கச் சொத்­து­களும் புத்­தாக்­க­மும் தொடர்­பில் சிங்­கப்­பூர் அர­சாங்­கத்­தின் கண்­ணோட்­டம் சரி­யான பாதை­யில் இருப்­பதை மறு­உ­று­திப்­ப­டுத்­தி­ இருப்­ப­தா­கத் திரு வோங் கூறி­னார். இந்­தச் சொத்­து­கள் நிதிச் சந்­தை­களை உரு­மாற்­றக்­கூ­டி­யவை. எல்லை தாண்­டிய பணப் பரி­வர்த்­த­னை­கள், மூல­த­னச் சந்­தை­கள் ஆகி­ய­வற்­றில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யவை என்­றார் அவர்.

இருப்­பி­னும் சிங்­கப்­பூர் இவற்­றின் வர்த்­த­கம் தொடர்­பில் வலு­வான நிலைப்­பாட்­டைக் கொண்­டி­ருக்­க­வேண்­டும் என்று திரு வோங் வலி­யு­றுத்­தி­னார்.

புளூம்­பெர்க் செய்தி நிறு­வ­னத்­தின் தலை­மைச் செய்தி ஆசி­ரி­யர் ஜான் மிக்­லெத்­வெய்ட் வழி­ந­டத்­திய கலந்­து­ரை­யா­ட­லில், 'எஃப்டி­எக்ஸ்' நிறு­வ­னம் நொடித்­துப்­போ­னது பற்­றி­யும் அவரிடம் கேட்­கப்­பட்­டது. அதற்கு முன்பே சிங்­கப்­பூர் மின்­னி­லக்க நாணய வர்த்­த­க விதி­முறை­க­ளைக் கடு­மை­யாக்­கி­ய­தைத் திரு வோங் சுட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!