ஜூரோங்கில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தாலை

'கிளாக்­சோஸ்­மித்­கி­ளைன்' (ஜிஎஸ்கே) நிறு­வ­னம் புற்­று­நோய் சிகிச்­சைக்­கான மேம்­பட்ட மருந்­தைத் தயா­ரிக்­கும் தொழிற்­சாலையை சிங்­கப்­பூ­ரில் திறந்­துள்­ளது. ஜூரோங்­கில் 44 மில்­லி­யன் வெள்ளி செல­வி­லான இந்­தத் தொழிற்­சாலை அமைந்­துள்­ளது.

'மல்­டி­பிள் மயி­லோமா' எனப்­படும் அரி­ய­வகை ரத்­தப் புற்­று­நோய்க்­கான மருந்து இதில் தயா­ரிக்­கப்­படும். எலும்பு மஜ்­ஜை­யைப் பாதிக்­கும் இந்த வகைப் புற்­று­நோய் முது­குத்­தண்டு, மண்டை ஓடு உள்­ளிட்ட இதர சில பாகங்­க­ளை­யும் பாதிக்­கக்­கூ­டி­யது.

'ஏடிசி' எனப்­படும் புற்­று­நோய் உயி­ர­ணுக்­க­ளைக் குறி­வைத்து அழிக்­கும் வேளை­யில் ஆரோக்­கி­ய­மான உயி­ர­ணுக்­க­ளைச் செலுத்­தும் முறை­யைப் பின்­பற்­றும் மருந்­து­கள் இந்த தொழிற்­சா­லை­யில் தயா­ரிக்­கப்­படும்.

தொழிற்­சா­லைத் திறப்­பு­வி­ழா­வில் உரை­யாற்­றிய பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் ஜேக்­கு­லின் போ, "உல­கெங்­கும் புற்­று­நோ­யா­ளி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­து­வ­ரும் நிலை­யில், புத்­தாக்­க­மிக்க, குறை­வான பக்­க­வி­ளை­வு­க­ளைக்­கொண்ட சிகிச்சை முறை­க­ளைக் கண்­டு­பி­டிப்­பது முக்­கி­யம்," என்­றார்.

தானி­யக்க இயந்­தி­ரங்­கள், தர­நி­லைக் கட்­டுப்­பா­டு­கள் போன்­றவை இந்­தத் தொழிற்­சா­லை­யின் சிறப்­பம்­சங்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!