உலகக் கிண்ணக் காற்பந்து தொடர்பில் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளை ஒடுக்க அதிகாரிகள் முனைப்பு

இம்­மா­தம் 20ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 18ஆம் தேதி வரை கத்­தா­ரில் உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­கள் நடை­பெ­ற­வி­ருக்­கின்­றன. இவ்­வே­ளை­யில் சட்­ட­விரோத சூதாட்­டம், அதற்கு அடி­மை­யா­னோ­ரால் ஏற்­ப­டக்­கூ­டிய பிரச்­சி­னை­கள் ஆகி­ய­வற்­றைத் தடுக்க அதி­கா­ரி­கள் நட­வ­டிக்­கை­களைத் தீவி­ரப்­ப­டுத்த உள்­ள­னர்.

உள்­துறை அமைச்சு, சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு ஆகி­யவை இணைந்து வெளி­யிட்ட அறிக்­கை­யில், காற்­பந்து ஆர்­வ­லர்­கள் இத்­த­கைய சூதாட்­டங்­கள் தொடர்­பில் பொறுப்­பு­டன் செயல்­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்டு உள்­ளது.

சட்­ட­வி­ரோ­த­மா­கச் செயல்­ப­டு­வோர்­மீது காவல்­துறை கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கும் என்று கூறப்­பட்­டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி நடப்­புக்கு வந்த சூதாட்­டக் கட்­டுப்­பாட்­டுச் சட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூ­ரில் உரி­மம் பெறாத அல்­லது விதி­வி­லக்கு பெறாத சூதாட்ட நட­வ­டிக்­கை­கள் அனைத்­தும் தடை­செய்­யப்­பட்­டுள்­ளன.

'ஸ்போர்ட்ஸ் சிங்­கப்­பூர்' அமைப்பு மட்­டுமே இந்த விளை­யாட்டு தொடர்­பான பந்­தய நட­வ­டிக்­கை­களை நடத்த உரி­மம் பெற்­றுள்­ளது.

சட்­ட­வி­ரோத சூதாட்ட நட­வ­டிக்­கை­களில் யாரே­னும் ஈடு­பட்­டது நிரூ­பிக்­கப்­பட்­டால் ஏழு ஆண்டு வரை­யி­லான சிறைத்­தண்­ட­னை­யு­டன் 500,000 வெள்ளி அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

உரி­ம­மற்ற பந்­தய நட­வ­டிக்­கை­யா­ள­ரின் சேவை­க­ளைப் பயன்­படுத்­து­வோ­ருக்கு ஆறு மாதம் வரை­யி­லான சிறைத்­தண்­ட­னையோ 10,000 வெள்ளி வரை­யி­லான அப­ரா­தமோ இரண்­டுமோ விதிக்­கப்­ப­ட­லாம்.

சூதாட்­டத்­திற்கு அடி­மை­யா­னோ­ருக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­கான தேசிய மன்­றம், பொது­மக்­களுக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தும் வகை­யில் பிர­சார இயக்­கத்தை நடத்­த­வி­ருக்கிறது. சூதாட்­டத்­திற்கு அடி­மை­யா­ன­தால் சிக்­கல்­களை எதிர்­கொள்­வோர் பெய­ரைத் தெரி­விக்­கா­மலே 1800-6-668-668 என்ற தொலைபேசி எண்­ணிலோ www.ncpg.org.sg எனும் இணை­யத்­தள முக­வ­ரி­யிலோ உதவி நாட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!