மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 23 ஆண்டுச் சிறை

மதிநுட்­பக் குறை­பாடு உள்ள தனது 34 வயது மக­ளைப் பாலி­யல் வன்கொடுமை செய்த 58 வயது ஆட­வ­ருக்கு நேற்று 23 ஆண்­டுச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

மனை­வி­யு­டன் பல ஆண்­டா­கப் பாலி­யில் உறவு இல்­லா­த­தால் ஆட­வர் காத­லி­யு­டன் தொடர்­பில் இருந்­த­தா­க­வும் அவ­ரைப் பிரிந்த பிறகு மக­ளி­டம் தவ­றாக நடந்­து­கொண்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட இளம்­பெண்­ணின் அடை­யா­ளத்­தைக் காக்­கும் பொருட்டு, ஆட­வர் குறித்த மேல்­வி­வ­ரங்­களை வெளி­யிட அனு­மதி இல்லை.

2020ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி இரவு அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பின் மாடிப்­படி அருகே மக­ளி­டம் தந்தை தகாத முறை­யில் நடந்­து­கொள்­வ­தைப் பார்த்த தாயார் தனது மற்­றொரு மக­ளு­டன் கலந்­தா­லோ­சித்த பிறகு ஜூலை 10ஆம் தேதி காவல்­து­றை­யி­டம் புகா­ர­ளித்­ததாகக் கூறப்பட்டது.

ஆட­வர் அதே நாளில் கைது­செய்­யப்­பட்­டார்.

தன் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை ஆடவர் ஒப்­புக்­கொண்­ட­தை­ய­டுத்து நேற்று அவ­ருக்­கு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!