எவரெஸ்ட் மலை அடிவாரத்தை அடைந்த ஆறு வயது சிங்கப்பூர் சிறுவன் ஓம் மதன்

எவரெஸ்ட் மலை அடிவாரத்தில் உள்ள முகாமுக்கு நடந்துசென்ற ஆக இளைய சிங்கப்பூரர் என்ற சாதனையை ஆறரை வயது சிங்கப்பூர் சிறுவன் படைத்துள்ளார்.

இமயமலைத் தொடரில் உள்ள எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு நடந்துசெல்வது எளிதான செயல் அல்ல.

அதைச் செய்து சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் ஓம் மதன் கார்க் என்ற சிறுவன்.

சிங்கப்பூர் சாதனை புத்தக இணையத்தளத்தில் அது தெரிவிக்கப்பட்டுள்ளது.

லுக்லா என்ற கிராமத்தில் செப்டம்பர் 28ஆம் தேதி அன்று ஓம் தன் பெற்றோருடன் நடைப்பயணத்தைத் தொடங்கினான். பத்து நாள்களில் 65 கிலோமீட்டர் அயராது நடந்து அவன் அக்டோபர் 7ஆம் தேதி முகாமை அடைந்தான்.

அது மட்டுமல்ல, லுக்லா கிராமம் கடல் மட்டத்திலிருந்து 2,860 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆனால் அவன் நடந்து சென்றடைந்த எவரெஸ்ட் அடிவார முகாம் கடல் மட்டத்திலிருந்து 5,364 மீட்டர் உயரத்தில் உள்ளது.

ஓமும் அவனின் குடும்பத்தாரும் மோசமான பருவநிலை, விமானப் பயணங்கள் ரத்தானது, சுட்டெரிக்கும் வெயில், கடுங்குளிர் உள்ள இரவுகள் ஆகியவற்றைச் சமாளித்தனர்.

கெனோசாவில் பாலர்பள்ளியில் பாலர்பள்ளி இரண்டாம் வகுப்பில் ஓம் படிப்பதாக சிங்கப்பூர் சாதனை புத்தக இணையத்தளம் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!