சிங்கப்பூரில் அரிதாகக் காணப்படும் நாக்குப் புற்றுநோய்

சிங்­கப்­பூர் நாடா­ளு­மன்­றத்­தின் முன்­னாள் நிய­மன உறுப்­பி­ன­ரான ஜெனிஸ் கோ, கடந்த ஜூலை மாதம் தமது நாக்­கில் புற்­று­நோய் ஏற்­பட்டு அவ­திப்­பட்­ட­தாக இம்­மா­தத் தொடக்­கத்­தில் கூறி­யி­ருந்­தார்.

48 வய­தான அவ­ருக்கு இரண்டு மகன்­கள் உள்­ள­னர். சமூக ஊட­கப் பதிவு ஒன்­றில் அவர் தமக்கு ஏற்­பட்ட நிலையை விளக்கி இருந்­தார்.

“தொடக்­கத்­தில் நாக்­கில் சிறிய புண் ஏற்­பட்­ட­போது அதனை அலட்­சி­யப்­ப­டுத்திவிட்டு எனது வேலை­

க­ளைத் தொடர்ந்­தேன். அது பின்­னர் கடு­மை­யான விளைவை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. கடந்த மூன்று மாதங்­களில் கீமோ கதி­ரி­யக்க சிகிச்­சைக்­குச் சென்­ற­தா­க­வும் இரு முறை அறுவை சிகிச்சை செய்­து­கொண்­டேன்,” என்று அவர் குறிப்­பிட்டு இருந்­தார்.

இதன் கார­ண­மாக பேசு­வ­தி­லும் சாப்­பி­டு­வ­தி­லும் சிர­மம் ஏற்­பட்­ட­தாக அவர் தெரி­வித்து இருந்­தார்.

இச்­சம்­ப­வம் குறித்து கருத்­துத் தெரி­வித்த ‘த கேன்­சர் சென்­டர்’ என்­னும் மருத்­துவ நிலை­யத்­தின் இயக்­கு­ந­ரும் புற்­று­நோ­யி­யல் ஆலோ­ச­க­ரு­மான டாக்­டர் வோங் செங் வெங், நாக்­குப் புற்­று­நோய் என்­பது சிங்­கப்­பூ­ரில் அரி­தான ஒன்று என்­றும் இங்­குள்ள ஆண், பெண்­க­ளி­டையே கண்­ட­றி­யப்­படும் முதல் பத்து புற்­று­நோய்­களில் இது இடம்­பெ­ற­வில்லை என்­றும் கூறியுள்ளார்.

“சிங்­கப்­பூ­ரில் ஆண்­டுக்கு 80 பேர் நாக்­குப் புற்­று­நோ­யால் புதி­தா­கப் பாதிக்­கப்­ப­டு­கி­றார்­கள். உள்­ளூர் நோயா­ளி­க­ளைக் காட்­டி­லும் அதி­க­மான வெளி­நாட்­ட­வரே இத­னால் பாதிக்­கப்­ப­டு­வதை நான் கண்­டி­ருக்­கி­றேன்,” என்­றார் அவர்.

சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­

ம­னை­யின் காது, மூக்கு, தொண்டை சிகிச்­சைப் பிரி­வின் மூத்த மருத்­துவ ஆலோ­ச­கர் டாக்­டர் லிம் சுவீ மிங், ஆண்­டு­தோ­றும் 30 முதல் 40 புதிய நாக்­குப் புற்­று­நோ­யா­ளி­கள் தமது மருத்­து­வ­ம­னை­யில் பதி­வு­செய்­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

2013ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இங்கு 411 நாக்குப் புற்றுநோய் சம்பவங்கள் பதிவானதாக சிங்கப்பூர் புற்றுநோய்த் தடுப்புச் சங்கத்தின் 50ஆம் ஆண்டு விழா மலரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!