மனைவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய கணவருக்குச் சிறை

ஒரு வாக்­கு­வா­தத்­தின்­போது, கொதிக்­கும் எண்­ணெய்யை மனைவி மீது ஊற்­றி­னார் கண­வர். அந்த 53 வயது மாதுக்கு வலது கை உட்­பட பல்­வேறு இடங்­களில் காயங்கள் ஏற்­பட்­டன.

சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட அவ­ரின் இடது கைவி­ர­லில் எலும்பு முறிவு ஏற்­பட்­டி­ருப்­ப­தும் தெரிய வந்­தது. அவ­ருக்கு 45 நாள் மருத்­து­வ­ விடுப்பு கொடுக்­கப்­பட்­டது. அந்­தத் தம்­ப­தி­யர் மண­மு­றி­வுக்கு விண்­ணப்­பித்­துள்­ள­னர்.

சைமன் சியாங் செங் சுவான் எனும் அந்த 54 வயது ஆட­வ­ருக்கு நேற்று 15 மாதம், இரண்டு வாரம் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு மே 13ஆம் தேதி சியாங்­கின் 47 வயது நண்­பர் பொங்­கோல், சுமாங் வாக்­கில் உள்ள சியாங்கின் வீட்­டுக்கு $10 கடன் தொடர்­பாக பேச சென்­றார். அங்கு நடந்த வாக்­கு­வா­தத்­தில் சியாங் தமது நண்­ப­ரின் உட­லில் பல்­வேறு குத்­து­களை விட்டு, வீட்­டி­லி­ருந்து வெளியே ஓடி­னார்.

பின்­னர் மே 15ஆம் தேதி நள்­ளி­ரவு நேரத்­தில், சியாங்­கின் மனைவி வீட்­டின் கத­வைத் திறந்­த­போது, சியாங் அவ­ரைத் தாக்­கி­னார்.

அவ­ரி­ட­மி­ருந்து தப்­பித்து வீட்­டுக்கு வெளியே சென்று அவ­ரது மனைவி காவல்­து­றை­யி­னரை அழைத்­தார்.

மே 16ஆம் தேதி காலை 9.40 மணிக்கு வீட்­டுக்­குத் திரும்­பிய மனை­விக்­கும் கண­வ­ருக்­கும் இடையே வாக்­கு­வா­தம் வலுத்­தது. மேசை­யில் இருந்த கத்­தி­யைக் கொண்டு கணவர் தன்­னைத் தாக்­கக்­கூ­டும் என்று அஞ்­சிய மனைவி கத்­தியை எடுத்­து படுக்­கை­ய­றைக்­குள் வீசி­னார்.

"பின்­னர் அந்த ஆட­வர் சமை­ய ல­றை­ அடுப்பில் மீன் பொரிப்பதற்காக ஒரு சட்­டி­யில் கொதித்­துக்­கொண்­டி­ருந்த எண்­ணெய்யை எடுத்து மனை­வி­யின் வலது கையி­லும் முது­கி­லும் ஊற்­றி­னார்," என்று அர­சுத்­த­ரப்பு வழக்­க­றி­ஞர் கோ யி வென் கூறி­னார்.

அந்த எண்­ணெய்­யில் கால்பட்டு வழுக்கி மனைவி கீழே விழ, கண­வர் வீட்­டி­லி­ருந்து வெளி­யே­றி­னார். வாக்­கு­வா­தச் சத்­தத்­தைக் கேட்ட ஒரு­வர் காவல்­து­றைக்­குத் தக­வல் கொடுத்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!