உற்பத்தி 0.8% சரிவு

ஆண்டு அடிப்­ப­டை­யில் சிங்­கப்­பூ­ர் தொழிற்­சா­லை­க­ளின் உற்­பத்தி வளர்ச்சி இவ்­வாண்டு முதல்­முறை குறைந்­துள்­ளது.

மருந்­தி­யல் துறை உற்­பத்­தி­யில் காணப்­பட்ட வீழ்ச்­சி­யும் மின்­னி­யல் துறை­யின் தொடர் பல­வீ­ன­மும் மொத்த உற்­பத்தி விகி­தத்­தைக் குறைத்­தன.

அக்­டோ­பர் மாத உற்­பத்தி, கடந்த ஆண்­டின் அக்­டோ­பர் மாதத்­தைக் காட்­டி­லும் 0.8 விழுக்­காடு சரிந்­த­தாக பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழம் நேற்று தெரி­வித்­தது.

அதிக ஏற்ற, இறக்­கம் நிக­ழக்­கூ­டிய உயிர்­ம­ருத்­து­வப் பொருள்­

க­ளின் உற்­பத்­தி­யைத் தவிர்த்து கணக்­கிட்­டால் மொத்த உற்­பத்­தி­யின் அளவு 1.9 விழுக்­காடு வளர்ச்சி பெற்­றி­ருப்­ப­தைக் காண­லாம்.

மேலும் ஒட்­டு­மொத்த உற்­பத்தி குறித்து புளூம்­பெர்க் ஆய்­வில் பகுப்­பாய்­வா­ளர்­கள் முன்­ன­ரைத்­த­தைக் காட்­டி­லும் 0.9 விழுக்­காடு பதி­வாக உள்­ளது. இதற்கு முன்­னர் கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதத் தின் உற்­பத்தி 2 விழுக்­காடு சுருங்­கி­யது. அப்­போது மருந்­தி­யல் துறை அதற்­குக் கார­ண­மாக இருந்­தது.

மின்­னி­யல் துறை­யின் உற்­பத்தி கடந்த மாதம் 0.7 விழுக்­காடு குறைந்­தது.

செப்­டம்­பர் மாதம் 5.7 விழுக்­கா­டும் அதற்கு முந்­திய ஆகஸ்ட் மாதம் 6.9 விழுக்­கா­டும் இந்­தத் துறை­யின் உற்­பத்தி சரிந்­தது. அவற்­று­டன் ஒப்­பி­டு­கை­யில் கடந்த மாதத்­தின் சரிவு ஓர­ளவு குறைவே.

ஒட்­டு­மொத்த மின்­னி­யல் உற்­பத்­தி­யில் 80 விழுக்­காடு வகிக்­கும் பகுதிமின்­க­டத்­தி­யின் உற்­பத்தி அக்­டோ­பர் மாதம் 1.2 விழுக்­காடு வளர்ச்சி கண்­டது. செப்­டம்­பர் மாதம் காணப்­பட்ட 7.7 விழுக்­காடு சரி­வுக்கு மாறாக இந்த வளர்ச்சி பதி­வா­னது.

உலக நாடு­க­ளுக்­குத் தேவைப்­படும் பகு­தி­மின்­க­டத்­தி­யின் 11 விழுக்­காட்டை சிங்­கப்­பூர் விநி­யோ­கிக்­கிறது. அதே­போல 20 விழுக்­காடு கணி­னிச் சில்லு தயா­ரிப்பு சாத­னங்­க­ளை­யும் சிங்­கப்­பூர் விநி­யோ­கிக்­கிறது.

பகு­தி­மின்­க­டத்தி உற்­பத்­தி­யைத் தவிர இதர மின்­னி­யல் பாகங்­க­ளின் உற்­பத்தி 23.2 விழுக்காடு சரிந்­தது.

கணினிச் சாத­னங்­கள் மற்­றும் தரவு சேமிப்­புத் துறை 12.7 விழுக்­காடு விழுந்­தது.

உயிர்­ம­ருத்­து­வப் பொருள்­க­ளின் உற்­பத்­தி­யும் அக்­டோ­ப­ரில் 14.5 விழுக்­காடு குறைந்­தது.

மருத்­துவ சாத­னங்­க­ளுக்­கான அதிக ஏற்­று­ம­தித் தேவை கார­ண­மாக மருத்­து­வத் தொழில்­நுட்­பப் பிரிவு 4.2 விழுக்­காடு வளர்ச்­சிக்கு இடையே இந்தச் சரிவு பதி­வாகி உள்­ளது.

மற்­றொரு துறை­யான ரசா­ய­னத் துறை­யின் உற்­பத்­தி­யும் சென்ற மாதம் 9.7 இறக்­கத்­தைச் சந்­தித்­தது.

அதே­நே­ரம், உலக அள­வில் விமா­னப் பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தைத் தொடர்ந்தும் விமான எரி­பொ­ரு­ளுக்­கான உல­க­ளா­விய தேவை அதி­க­ரித்­த­தாலும் பெட்­ரோ­லி­யத் துறை 14.6 விழுக்­காடு வளர்ச்சி அடைந்­தது.

ஆயி­னும், பெட்ரோலிய ரசாயனத் ­துறை 12 விழுக்­காடு சரிந்­தது. சந்­தை­யில் தேவை பல­வீ­ன­ம­டைந்­த­தும் பரா­ம­ரிப்­புக்­கா­கத் தொழிற்

­சா­லை­கள் மூடப்­பட்­ட­தும் இந்­தச் சரி­வுக்­குக் கார­ணங்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!