அரசியல் சாசனத்துக்கு எதிராக போதைப்பொருள் குற்றவாளிகள் தொடுத்த வழக்கு தள்ளுபடி

மரண தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தைத் தடுக்­க­வும் அர­சி­யல் சாச­னத்­துக்கு எதி­ரா­க­வும் போதைப் பொருள் குற்­ற­வா­ளி­கள் நால்­வர் தொடுத்த வழக்கை உயர்­நீ­தி­மன்­றம் தள்­ளு­படி செய்­தி­ருக்­கிறது.

சில அம்­சங்­கள் தங்­கள் செய­லில் இல்லை என்­ப­தால் தாங்­கள் நிர­ப­ரா­தி­கள் என நிரூ­பிக்­கும் பொறுப்பு தங்­க­ளுக்கு உள்­ளது எனக் கூறப்­ப­டு­வ­தற்கு எதி­ராக அவர்­கள் வழக்கு தொடுத்­த­னர்.

அதன்­வழி, குற்­றம் நிரூ­பிக்­கப்­படும் வரை ஒரு­வ­ரைக் குற்­ற­மற்­ற­வர் என்று கரு­தும் அடிப்­ப­டைப் பாது­காப்பு, அர­சி­யல் சாச­னத்­தின் 9ஆம், 12ஆம் பிரி­வு­களில் மீறப்­பட்­டுள்­ள­தாக சிறைக் கைதி­கள் வாதிட்­ட­னர்.

ஜுமாட் முக­மது சயிட் எனும் சிங்­கப்­பூ­ர­ரும் லிங்­கேஸ்­வ­ரன் ராஜேந்­தி­ரன், தட்­சி­ணா­மூர்த்தி காத்­தய்யா, சாமி­நா­தன் செல்­வ­ராஜு எனும் மூன்று மலே­சி­யர்­களும் வழக்­கில் தாங்­களே வாதிட்­ட­னர்.

அவர்­க­ளுக்­காக வழக்­க­றி­ஞர்­கள் யாரும் வழக்­கா­ட­வில்லை.

ஆனால் உயர்­நீ­தி­மன்­றம் அந்த வழக்கை நேற்று தள்­ளு­படி செய்­தது. தங்­கள் வழக்­கு­களில் இறு­தித் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட மூன்று மாத அவ­கா­சத்­துக்­குப் பின்­னர் மேல்­மு­றை­யீடு செய்­யப்­பட்­ட­தாக உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி வேலரி தியன் தீர்ப்­பில் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!