‘பொருள்களின் விலையை குறைத்து வைத்திருப்பது சவால்’

ஃபேர்பிரைஸ் பேரங்காடி குறித்து ஃபேர்பிரைஸ் குழுமத் தலைவர் விபுல் சாவ்லா

உல­கெங்­கும் பண­வீக்­கம் அதி­க­ரிக்­கும்­வே­ளை­யில், பொருள்­க­ளின் விலை­யைத் தொடர்ந்து குறை­வாக வைத்­தி­ருப்­பது ஃபேர்பி­ரைஸ் பேரங்­காடி எதிர்­கொள்­ளும் முக்­கி­யச் சவால் என்று ஃபேர்பி­ரைஸ் குழு­மத் தலைமை நிர்­வாக அதி­காரி விபுல் சாவ்லா (படம்) கூறி­ இருக்­கி­றார்.

அடுத்த 12 முதல் 18 மாதங்­களுக்­குப் பொருள்­க­ளின் விலை­யைக் குறை­வாக வைத்­தி­ருப்­பது தொடர்­பான நெருக்­கு­தல் மேலும் அதி­க­ரிக்­கும் என்­றார் அவர். ஸ்ட்­ரெ­யிட்ஸ் டைம்­சுக்கு அளித்த பேட்­டி­யில் அவர் இவ்­வாறு குறிப்பிட்டார்.

"உல­கெங்­கு­மி­ருந்து சிங்­கப்­பூர் பொருள்­களை வாங்­கு­கிறது. மற்ற நாடு­க­ளின் விற்­பனை விலை சிங்­கப்­பூ­ரின் கட்­டுப்­பாட்­டில் இல்லை என்­ற­போ­தும் இங்கு விலை­யைக் கட்­டுக்­குள் வைக்­கும் முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

"அத்­து­டன் சில பொருள்­களுக்கு விலைக்­க­ழி­வும் வழங்­கப்­படு­கிறது. இது மிக­வும் சவா­லான அம்­சம்," என்று திரு விபுல் குறிப்­பிட்­டார்.

அடுத்த ஆண்­டின் முற்­பா­தி­யில், பொது­வாக அதி­கம் வாங்­கப்­படும் 500 பொருள்­க­ளின் விலை 1 விழுக்­காடு குறைக்­கப்­படும் என்று இம்­மா­தத் தொடக்­கத்­தில் ஃபேர்பிரைஸ் கூறி­யி­ருந்­தது. முட்டை, சமை­யல் எண்­ணெய் போன்­ற­வற்­றின் விலை அதி­க­ரித்­த­போதும் அவற்­றின் விலை­யை­யும் இப்­பே­ரங்­காடி குறைத்­தது. இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் நிறு­வ­னத்­தின் லாபத்தைப் பாதித்­தன.

எடுத்­துக்­காட்­டாக, கடந்த ஜூன் மாதம் சிங்­கப்­பூ­ருக்­கான கோழி இறைச்சி ஏற்­று­ம­தியை மலே­சியா தடை­செய்­த­போது மாற்­று­வ­ழி­களில் கோழி இறைச்­சியை விற்­பனை செய்ய நேரிட்­ட­தில் நிறு­வ­னத்­திற்­குக் கூடு­தல் செலவு ஏற்­பட்­ட­தைத் திரு விபுல் சுட்­டி­னார்.

அதி­க­ரிக்­கும் பண­வீக்­கம் மட்­டு­மன்றி, புவி­சார் அர­சி­யல் பதற்­றங்­கள், ரஷ்­யா­வுக்­கும் உக்­ரே­னுக்­கும் இடை­யி­லான போர் போன்­ற­வை­யும் விநி­யோ­கச் சங்­கி­லி­யைப் பாதிக்­கின்­றன. இவற்­றைச் சமா­ளிக்­கப் பெரிய அள­வி­லான முத­லீடு செய்­யப்­பட்­டி­ருக்­கிறது என்­றார் திரு விபுல். முட்டை, பால் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களைப் பல்­வேறு தரப்­பி­ன­ரி­டம் இருந்து பெறு­தல், அவற்­றைச் சேமித்து வைத்­தல் ஆகி­ய­வற்­றில் கவ­னம் ­செ­லுத்­தப்­ப­டு­கிறது.

இத்­த­கைய உட­ன­டிச் சவால்­களைச் சமா­ளிப்­பது மட்­டு­மன்றி, ஃபேர்பி­ரைஸ் நிறு­வ­னத்­துக்கு சில நீண்­ட­கா­லத் திட்­டங்­களும் உள்­ளன. அடுத்த சில ஆண்­டு­களில் வாடிக்­கை­யா­ளர் எண்­ணிக்­கையை 1.8 மில்­லி­ய­னுக்கு உயர்த்­து­வது இவற்­றில் ஒன்று. தற்­போது 700,000 பேர் அதன் வாடிக்­கை­யா­ளர்­கள். 'கோப்­பிதியாம்', 'ஃபுட்ஃபேர்' ஆகிய உண­வுச் சேவை­களை மேம்­ப­டுத்­து­வ­தும் இலக்கு.

ஆசி­யா­வில் அதி­கம் போற்­றப்­படும் சில்­லறை விற்­ப­னை­யா­ளர் என்ற நிலையை ஃபேர்பி­ரைஸ் எட்டு­வ­தற்கு இந்­ந­ட­வ­டிக்­கை­கள் உத­வும் என்று கூறிய திரு விபுல் அதுவே தனது நீண்­ட­கால இலக்கு என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!