‘தமிழ் சார்ந்த துறைகளில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை தேவை’

'தமிழ் பணியே நற்­பணி; அதற்கே உன்னை அர்ப்­பணி' என்ற கொள்­கை­யைப் பின்­பற்றி வரும் குமாரி கலை­வாணி, தமி­ழா­சி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரிந்து வரு­கி­றார். இவர் ஆண்­டர்­சன் தொடக்­கக் கல்­லூரி­யின் முன்­னாள் மாணவி ஆவார்.

தமிழ்­மொழி மற்­றும் இலக்­கியத்­தில் அதீத ஆர்­வம் கொண்ட இவர், தமி­ழா­சி­ரி­யர் ஆக வேண்­டும் என்ற குறிக்­கோ­ளு­டன் தன் விடா­மு­யற்­சி­யால் இன்று கல்வி அமைச்­சின் பாடக்­க­லைத்­திட்ட வரைவு மேம்­பாட்டு பிரி­வில் பணி­யாற்­று­கி­றார். தொடக்­கக் கல்­லூரி­யில் தனது தமிழ் இலக்­கிய பாடம் மிக­வும் சுவா­ர­சி­ய­மாக இருந்­ததே தன்­னைத் தமிழ் துறை­யில் சாதிக்க வேண்­டும் என்ற ஊக்­கத்தை அளித்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

தனது தமி­ழா­சி­ரி­யர் திரு வீரமுத்து கணே­சன் பற்றி கூறு­கை­யில், அவ­ரின் அறி­வு­ரை­களைத் தான் வேத­மந்­தி­ர­மா­கக் கரு­தி­ய­தா­க­வும் செல்வி கலை­வாணி குறிப்­பிட்­டார்.

போட்­டி­களில் துணிந்து கலந்து­கொள்ள வேண்­டும், அவற்­றில் வெற்­றி­பெ­று­வ­தற்­கான உழைப்­பைச் செலுத்­தி­னால் பலன் கிட்­டும் என்று அவர் அறி­வு­றுத்­தி­ய­தைத் தான் இந்­நாள்­வரை பின்­பற்றி வரு­வ­தா­கக் கூறி­னார்.

தமிழ் இலக்­கி­யப் பாட­மா­னது நம் வாழ்­வு­டன் தொடர்­பு­ப­டுத்­திக் கொள்­ளக்­கூ­டி­யது என்­றும் அதைக் கற்க கற்க மாண­வர்­களுக்கு ஆர்­வம் அதி­க­ரிக்­கும் என்­றும் குறிப்­பி­டு­கி­றார் அவர். தமிழ் ஆசி­ரி­யர் ஆக வேண்­டும் எனும் லட்­சி­யம் தன்­னுள் சிறுவயது முதலே இருந்­த­தா­க­வும் ஆசி­ரி­யர்­க­ளான தனது பெற்­றோரின் ஆத­ர­வோ­டும் கனவு நன­வா­னது என்­றும் கூறி­னார்.

தமிழ் துறை­யில் சாதிக்க வேண்­டும் என்ற வேட்கை, தமிழ் மொழியை தான் ஆழ்ந்து கற்­கத் தொடங்­கி­யது முதல் தன்­னுள் எழுந்­தது என்­றும் இன்­றைய கல்­விச் சூழ­லில் தமிழ்மொழி விருப்­ப ­பா­டத்­திட்­டம் போன்ற கல்வி அமைச்­சின் முன்­னெ­டுப்­பு­கள் மாண­வர்­க­ளுக்­குக் கிடைத்த சிறந்த வாய்ப்பு என்­றும் பகிர்ந்து­கொண்­டார் கலை­வாணி.

இதன்­வழி தமிழ்மொழி, கலா­சா­ரம், பண்­பாடு ஆகி­ய­வற்றை, கற்­ற­லு­டன் இணைத்து மாண­வர்­க­ளால் அனு­ப­வ­பூர்­வ­மா­கப் பயன்­பெற முடி­யும் என்­றார் அவர்.

உயர்­நி­லைப் பள்­ளி­யில் ஐந்­தாண்­டு­கள், தொடக்­கக் கல்­லூரி­யில் மூன்று ஆண்­டு­கள் என ஆசி­ரி­யர் பணி­யில் இருந்த அவர், தன் பணி வகுப்­ப­றை­யில் மட்­டும் அடங்­கி­டாது மாண­வர்­க­ளின் கற்­ற­லுக்­கான பாடத்­திட்­டத்தை வகுக்­கும் முக்­கி­யப் பங்­கினை தற்­போது செய்து வரு­கி­றார்.

பன்­மு­கத் திறமை கொண்ட கலை­வாணி, கவி­தை­கள், கட்­டுரை­கள், சிறு­க­தை­கள், நாட­கங்­கள், நகைச்­சு­வைத் துணுக்­கு­கள் போன்ற பல்­வேறு இலக்­கி­யப் படைப்­பு­களை படைத்து அவற்­றின்­வழி தனது திற­மையை வெளிக்­காட்­டு­கி­றார்.

தனது படைப்­பு­களை ஒரு புத்­த­க­மாக வெளி­யிட வேண்­டும் என்ற நோக்­கத்­தி­லும் இருக்­கி­றார் கலை­வாணி. கடந்த ஆண்டு லிஷா தமிழ் மன்­றத்­தின் தலை­வ­ராக அவர் பொறுப்­பேற்­றுத் தன் கட­மை­க­ளைச் செவ்­வனே ஆற்றி வரு­கி­றார்.

தனது தொடக்­கக் கல்­லூரி காலத்­தில் 'சொற்­சி­லம்­பம்' போன்ற விவா­தப் போட்­டி­யில் கலந்­து­கொண்டு வெற்­றிக் கிண்ணத்தைப் பெறத் தவ­றாத குழு­வில் ஒரு­வ­ரா­கத் திகழ்ந்த அவர், இன்­றும் பட்­டி­மன்­றப் பேச்­ச­ரங்­கு­களில் தனது ஆளு­மை­யைக் காட்டி வரு­கி­றார்.

இன்­றைய மாண­வர்­கள் தமிழ்­மொழி சார்ந்த நிகழ்ச்­சி­க­ளி­லும் படைப்­பாக்­கத்­தி­லும் ஆர்­வத்­து­டன் பங்­கு­பெற வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­தும் கலை­வாணி, தமிழ் சார்ந்த துறை­களில் தங்­கள் பிள்­ளை­கள் சாதிக்க முடி­யும் என்ற நம்­பிக்­கை­யைப் பெற்­றோர் வளர்த்­துக்­கொள்ள வேண்­டும் எனக் கேட்­டுக்­கொள்­கி­றார்.

தமிழ் மாண­வர்­கள் தங்­கள் தாய்­மொ­ழி­யின் மீது பற்றை வளர்த்­துக்­கொள்­ள­வும் தங்­க­ளது கலா­சா­ரத்­தைப் பற்­றிய புரி­தலை ஏற்­ப­டுத்­திக்கொள்ள முயற்சி செய்­ய­வும் தங்­க­ளின் ஓய்வு நேரங்­களில் தமிழ் நிகழ்ச்­சி­களில் பங்­கெ­டுத்­துப் பயன்பெறு­மாறு அவர் கேட்­டுக்கொள்­கி­றார்.

பேட்டி கண்ட மாணவர்: ப.அ.ரகுநந்தன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!