மசே நிதி அடிப்படை சுகாதாரப் பராமரிப்புத் தொகை 2023ல் $68,500ஆக உயரும்

வரும் ஜன­வரி 1ஆம் தேதி­ முதல், 65 வய­துக்­குக்கீழ் உள்ள மத்­திய சேம நிதி (மசே­ நிதி) உறுப்­பி­னர்­க­ளுக்­கான அடிப்­படை சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் தொகை, $66,000யி லி­ருந்து $68,500க்கு உயர்த்­தப்­படும்.

அடுத்த ஆண்டு 66 வய­தா­வுள்­ளோர் அல்­லது அதற்­கும் மேலா­ன­வர்­க­ளுக்­கான அடிப்­ப­டைச் சுகா­தா­ரத் தொகை­யில் எந்த மாற்­ற­மும் இருக்­காது. மத்­திய சேம நிதிக் கழ­கம், சுகா­தார அமைச்சு, வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் ஆகி­யவை இணைந்து இதை நேற்று தெரி­வித்­தன.

அடிப்­படை சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் தொகை, முது­மை­யில் அடிப்­படை அர­சாங்க உத­வித்­தொகை பெற்ற சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக்­குத் தேவை என்று மதிப்­பி­டப்­படும் தொகை­யா­கும்.

மெடி­சேவ் கணக்­கி­லி­ருந்து பயன்­ப­டுத்­தப்­படும் தொகை கூடு­வ­தற்கு ஏற்ப, ஒவ்­வோர் ஆண்­டும் அத்­தொகை 65 வய­துக்­கும் கீழுள்ள மசே­நிதி உறுப்­பி­னர்­க­ளுக்கு மாற்­றப்­பட்டு வரு­கிறது.

மசே ­நிதி உறுப்­பி­னர்­கள் 65 வயதை அடை­யும்­போது நிர்­ண­யிக்­கப்­படும் அடிப்­படை சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் தொகை அவர்­கள் வாழ்­நா­ளில் மாறா­தி­ருக்­கும்.

மேலும், மசே ­நி­திக் கணக்கு களுக்­கான வட்டி விகி­தம் ஆண்­டின் முதல் காலாண்­டில் அதே அள­வில் இருக்­கும் என்று கூறப்­பட்­டது.

இருப்­பி­னும் மசே நிதி வட்டி விகி­தம், நீண்­ட­கால கண்­ணோட்­டத்­தைக் கருத்­தில் கொள்­ளும் அதே வேளை­யில் தற்­போ­தைய சூழ­லில் பொருத்­த­மாக இருப்­பதை அர­சாங்­கம் உறு­தி­செய்­யும் என்று மூன்று அமைப்­பு­களும் கூறின.

வரும் ஜன­வரி 1ஆம் தேதி­யி­லி­ருந்து மார்ச் 31ஆம் தேதி வரை, 55 வய­துக்­குக் கீழுள்ள மசே­ நிதி உறுப்­பி­னர்­க­ளுக்கு சாதா­ர­ணக் கணக்­கில் தொடர்ந்து ஆண்­டுக்கு மூன்­றரை விழுக்­காடு வரை­யி­லான வட்டி வழங்­கப்­படும். சிறப்­புக் கணக்கு, மெடி­சேவ் கணக்கு ஆகி­ய­வற்­றில் ஆண்­டுக்கு ஐந்து விழுக்­காடு வரை­யி­லான வட்டி தொட­ர்ந்து வழங்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!