தமிழ் முரசு காப்பிக் கடையில் துடிப்பான வாழ்க்கைமுறை

ஆ. விஷ்ணு வர்­தினி

இந்­தி­யர்­க­ளி­டையே நீரி­ழிவு நோய் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு, 2020ல் 14.2 விழுக்­காடாக இருந்தன எனப் புள்ளி விவ­ரங்­கள் காட்­டு­கின்­றன.

இந்­நி­லை­யில், துடிப்­பு­மிக்க வாழ்க்­கை­ மு­றையை இந்­தி­யர்­கள் அன்­றாட வாழ்­வி­ல் கடைப்­பி­டிக்­கி­றார்­களா என்ற கேள்­வியை ஆராய்ந்­தது தமிழ் முர­சின் ஆக அண்­மைய காப்­பிக் கடை பேச்சு வலை­யொளி.

அண்­மை­யில் அறி­விக்­கப்­பட்ட 'ஹெல்­தி­யர் எஸ்ஜி' திட்­டம், ஆரோக்­கி­ய­மான வாழ்­வி­ய­லுக்கு முக்­கி­ய­மான ஐந்து கூறு­களை வலி­யு­றுத்­தும் பல அர­சாங்க முயற்­சி­களை உள்­ள­டக்­கி­யுள்­ளது. அதில் ஒரு கூறான உடற்­பயிற்சி விழிப்­பு­ணர்வு பற்றி கலந்­து­ரை­யா­டி­னர், தமிழ் முர­சைச் சேர்ந்த நால்­வர்.

த­ாமா­கவோ, வகுப்­பு­களில் இணைந்தோ உடற்­ப­யிற்சி செய்­யும் தங்களது அனு­ப­வங்­களை முன்­வைத்­த­து­டன், அர­சாங்­கத்தின் முயற்­சி­க­ளால் எவ்­வாறு மக்­கள் பய­ன­டை­ய­லாம் என்­ப­தை­யும் அவர்­கள் சுட்­டி­னர். உடற்­ப­யிற்சி செய்­வதை வழக்­கப்­ப­டுத்­திக் கொள்­வ­தில் பல இன்­னல்­கள் குறுக்­கி­ட­லாம். நேரப் பற்­றாக்­குறை, உகந்த இயற்­கை­யான சூழல் இல்­லா­தது முத­லி­யவை அவற்­றுள் சில.

அண்­மை­யில் 125 கிலோ­கி­ராம் எடை தூக்கி தனிப்­பட்ட சாதனை படைத்த சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம், தற்­காப்­புக் கலை­களை மேற்­கொண்ட அமைச்­சர் ஓங் யி காங், நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான் ஜின் ஆகி­யோர் இத்­த­கைய மனப்­பான்­மையை சமூகத்­தில் மாற்றி வரு­கின்­ற­னர்.

அதனுடன், ஒவ்­வொரு தனி­ நபரும் அணு­கக்­கூ­டிய தூரத்­தில் பூங்­காக்­க­ளை­யும் பூங்கா இணைப்பு ­க­ளை­யும் அர­சாங்­கம் அமைத்து வரு­கின்­றது. எளி­மை­யான முறை­யில், வச­தி­யாக உடற்­ப­யிற்சி செய்­யும் அள­விற்கு மாறி­வ­ரும் சிங்­கப்­பூர் சூழ­லில், இந்­தி­யர்­கள் எவ்­வ­கை­யான உடற்­ப­யிற்­சி­களை மேற்­கொள்­ள­லாம் என்­ப­தை­யும் வலை­யொளி ஆராய்ந்­தது.

உற்­சா­க­மா­ன உரை­யா­ட­லாக அமைந்த இந்த தமிழ் முரசு காப்­பிக் கடை வலை­யொ­ளியை, ஸ்பாட்­டிஃபை, யூடி­யூப் தளங்­க­ளி­லும் தமிழ் முர­சின் இணை­யப்­பக்­கத்­தி­லும் வாசகர்கள் காண­லாம்.

ஸ்போட்­டிஃபை: Tamil Murasu Kopi Kadai

இணை­யத்­த­ளம்: https://www.tamilmurasu.com.sg/podcasts

யூடி­யூப்: https://youtu.be/VAtwc4Uch_A

https://omny.fm/shows/tamil-murasu-kopi-kadai/murasu-kopi-kadai-active-…

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!