அரசு நிதி உதவியுடன் தற்காப்பு வழக்கறிஞரை அமர்த்த ஏற்பாடு

புதிய பிரதிவாதி அரசு வழக்குரைஞர் அலுவலகம்; வசதி குறைந்த மேலும் பலருக்கு உதவி

பொன்­மணி உத­ய­கு­மார்

குறைந்த வரு­மா­னம் பெறு­வோ­ரில் மேலும் பல­ரும் குற்­ற­வி­யல் சட்ட உதவி பெற உத­வி­யாக, சட்ட அமைச்சு புதி­தாக ஏற்­ப­டுத்­தி­யுள்ள பிர­தி­வாதி அர­சாங்க வழக்­கு­ரைஞர் அலு­வ­ல­கம் நேற்று அதி­கா­ர­பூர்­வ­மாகத் தொடங்­கி­யது.

மரண தண்­டனை இல்­லாத குற்ற வழக்­கு­களில் குற்­றம் சாட்­டப்­பட்­டோர் இந்­தப் புதிய அலு­வலகம் மூலம் வழக்­க­றி­ஞர்­களை அமர்த்தி வாதா­ட­லாம்.

இந்த திட்­டம் மக்­க­ளுக்கு நீதி கிடைக்­கும் வாய்ப்பை அதி­க­ரிப்­ப­தோடு, வழக்­க­றி­ஞர்­க­ளின் பிர­தி­நி­தித்­து­வம் கிடைப்­ப­தற்­கும் வழி­வகுக்­கிறது. அந்த அலு­வ­ல­கம் சட்ட அமைச்­சின் கீழ் செயல்­படும் ஒரு துறை­யாக இருக்­கும்.

அரசு நீதி­மன்­றங்­களில் நடந்த தொடக்க நிகழ்ச்­சி­யில், முன்­னாள் அரசுத் தரப்பு துணை வழக்­குரைஞர் வோங் கோக் வெங், பிரதிவாதி அர­சாங்க தலைமை வழக்­கு­ரை­ஞ­ராகப் பெயர் குறிப்­பி­டப்­பட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் சட்­டம் நியா­ய­மான முறை­யில் அமல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு சட்ட பிர­தி­நி­தித்­து­வத்தை அனை­வரும் பெறக்­கூ­டிய வாய்ப்பு இருக்க வேண்­டும் என்­றும் அது சிறந்த சட்ட அமைப்­புக்கு முக்­கி­ய­மா­னது என்­றும் திரு வோங் தமது உரை­யில் வலி­யு­றுத்­தி­னார்.

பிர­தி­வாதி அர­சாங்க தலைமை வழக்­கு­ரை­ஞர் உட்­பட மொத்­தம் 11 முழு­நேர வழக்­கு­ரை­ஞர்­கள் பிரதி­வாதி அலு­வ­ல­கத்­தில் இப்­போது பணிபுரி­கின்­ற­னர். இந்த எண்­ணிக்கை வருங்­கா­லத்­தில் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

திறப்பு விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்துகொண்டு உரை ஆற்­றிய துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங், குற்­ற­வி­யல் உத­வித் திட்­டம் இருக்­கும் மற்ற நாடு­களில் செல­வு­கள் அதி­க­ரிப்­ப­தைச் சுட்­டிக்­காட்­டி­னார்.

அந்த அனு­ப­வங்­க­ளி­லி­ருந்து கற்­றுக்­கொண்டு சிங்­கப்­பூர் நடை­முறை சாத்­தி­ய­மான, செல­வு­ரீ­தி­யில் கட்டுப்­ப­டி­யா­கக்கூடிய வழி­யில் செயல்­பட முடி­யும் என்று தான் நம்­பு­வ­தா­க­ அவர் கூறி­னார்.

சட்ட அமைச்­சர் கா சண்­மு­கம், சட்ட இரண்­டாம் அமைச்­சர் எட்­வின் டோங், சட்ட அமைச்­சின் மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் ரஹாயு மஹ்­ஸாம் ஆகி­யோ­ரும் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­னர்.

"குறைந்த வரு­மா­னம் உள்­ள­வர்­கள் நீதி­மன்­றத்­தில் குற்ற வழக்­கு­களில் ஈடு­பட்­டி­ருந்­தால், சட்ட ரீதி­யாக நீதித் துறை­யில் உதவ இந்த பிர­தி­வாதி அர­சாங்க வழக்­கு­ரை­ஞர் அலு­வ­ல­கத்தை அர­சாங்­கம் சமுதாய முன்­னேற்­றம் கருதி உரு­வாக்­கி­ உள்­ள­து. ஆனால் அர­சாங்­கத்­தின் நிதி உத­வி­கள் வரிப்­பணத்­தி­லி­ருந்து வரு­வ­தால், தவ­றான முறை­யில் இந்த உதவி பயன்­ ப­டுத்­தப்­படக்கூடாது என்­றும் அதை தவிர்க்க தகுதி அடிப்­படையிலான பரி­சோ­தனை­களை வைத்து சட்ட உதவி வழங்­கப்­படும் என்­றும் அமைச்­சர் சண்முகம் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!