சேமிப்புக் கணக்கு வட்டி விகிதத்தை யுஓபி உயர்த்தியது

டிபி­எஸ் வங்கி, ஓசி­பிசி வங்­கியை அடுத்து சேமிப்­புக் கணக்­கிற்­கான வட்­டி­வி­கி­தங்­களை யுஓபி வங்­கி­யும் அதி­க­ரித்துள்ளது.

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய வங்­கி­யான யுஓபி தனது 'ஒன் அக்­க­வுண்ட்' கணக்­கிற்­கான அதிகபட்ச வரு­டாந்­திர போனஸ் வட்டி விகி­தத்தை 3.6%லிருந்து 7.8%ஆக அதி­க­ரித்து இருப்பதாக தெரி­கிறது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று குறிப்­பிட்­டது.

வாடிக்­கை­யா­ளர்­கள் யுஓபி பண அட்­டை­யைக்கொண்டு மாதம் குறைந்­த­பட்­சம் $500 செல­வி­டும்­போது, சம்­ப­ளத் தொகையை $1,600க்கும் அதிக தொகையை வரவு வைக்­கும் பட்­சத்­தில் கணக்­கில் இருக்­கக்­கூ­டிய $75,000 முதல் $100,000 வரைப்­பட்ட தொகைக்கு இந்த வட்டி விகி­தம் பொருந்­தும்.

புதிய போனஸ் வட்டி விகி­தம் நேற்று முதல் நடப்­புக்கு வந்­தது. இந்த வங்­கி­யின் ஒன் அக்­க­வுண்ட் கணக்கு ஏழு ஆண்­டு­க­ளாக நடப்­பில் இருந்து வரு­கிறது.

இது­வ­ரை­ இந்த அள­வுக்கு வட்டி விகி­தம் இருந்­த­தில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. உள்ளூ­ரில் செயல்­படும் மூன்று முக்­கிய வங்­கி­க­ளான ஓசி­பிசி, டிபி­எஸ், யுஓபி ஆகிய மூன்­றை­யும் ஒப்­பிடும்போது யுஓ­பி­தான் ஆக அதிக அதிகபட்ச போனஸ் வட்டி விகி­தத்­தைக் கொண்­டி­ருக்­கிறது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!