நவம்பர் விற்பனையில் முதன்முறை பிடிஓ வீட்டுக்கு மனு: குவீன்ஸ்டவுனில் நல்வாய்ப்பு

குவீன்ஸ்­ட­வு­னில் நவம்­ப­ரில் விற்­பனைக்கு விடப்­பட்ட பிடிஓ வீடு­களை வாங்க முதல் முறை­யாக விண்­ணப்­பிப்­போ­ருக்கு வீடு கிடைக்க நல்ல வாய்ப்பு இருக்­கிறது.

அதே­நே­ரத்­தில், காலாங்/வாம்­போ­வில் கட்­டப்­படும் வீடு­க­ளைப் பெற விண்­ணப்­பிப்­போர் கடு­மை­யா­ன போட்­டியை எதிர்­நோக்க வேண்டி இருக்­கும் என்று தெரி­கிறது.

குவீன்ஸ்­ட­வு­னில் வீடு வாங்க முதல்­மு­றை­யா­கத் தாக்­க­ல் செய்யப் பட்டு இருக்­கும் விண்­ணப்­பங்­க­ளின் விகிதம் நேற்று பிற்­ப­கல் 2 மணி நில­வரப்­படி மூவறை வீட்­டுக்கு 0.3 ஆக இருந்­தது. நாலறை வீட்­டுக்கு 1.3ஆக இருந்­தது.

அந்­தப் பேட்­டை­யில் இடம்­பெறக்­கூ­டிய மூன்று பிடிஓ திட்­டங்­க­ளைச் சேர்ந்த வீடு­க­ளுக்­கான தேவை மந்­த­மாக இருப்­ப­தா­கத் தெரி­கிறது.

குவீன்ஸ்­ட­வு­னில் மூன்று பிடிஓ திட்­டங்­கள் இடம்­பெ­று­கின்­றன. அவற்­றில் உலு பாண்­டான் பேங்க்ஸ், கிம் மோ நேச்சுரா ஆகி­ய­வற்­றில் இடம்­பெ­றக்­கூ­டிய இரு திட்ட வீடு­கள் பிரதான இட பொது வீடமைப்பு மாதிரி (பிஎல்­எச்) வீடு­களா­கும். இத்­த­கைய பிர­தான இட வீடு­களை வாங்­கு­வ­தற்­கும் விற்­ப­தற்­கும் கடு­மை­யான நிபந்­த­னை­கள் உண்டு.

குவீன்ஸ்­ட­வு­னில் மூன்­றா­வது திட்­ட­மாக குவீன்ஸ்­ட­வுன் கெனோபி­யில் கட்­டப்­படும் வீடு­கள் பிஎல்­எச் மாதிரி வீடு­க­ளாக இருக்­காது.

காலாங் ஹொரைசன் பிடிஓ திட்ட வீடு­கள் நவம்­ப­ரில் விற்­பனைக்­கு விடப்பட்டன.

இந்த வீடு­கள் காலாங்/வாம்போ முதிர்ச்சி அடைந்த பேட்­டை­களில் இடம்­பெ­றும் பிஎல்­எச் மாதிரி வீடு­களா­கும். இவற்­றுக்குக் கடு­மை­யான தேவை நில­வு­கிறது.

விற்­ப­னைக்குக் கிடைக்­கும் நாலறை வீடு­கள் ஒவ்­வொன்­றுக்கும் ஆறு பேருக்­கும் அதிக விண்­ணப்­ப­தா­ரர்­கள் போட்­டி­யி­டு­கி­றார்­கள்.

இவர்­கள் எல்­லா­ருமே முதல்­முறை­யாக விண்­ணப்­பித்து இருப்­ப­வர்­கள். மூவறை வீடு­களில் ஒவ்­வொரு வீட்­டுக்­கும் மூன்று பேர் விண்­ணப்­பித்து இருக்­கி­றார்­கள்.

புக்­கிட் பாத்­தோக், தெங்கா, ஈசூன் ஆகிய முதிர்ச்சி அடை­யாத பேட்­டை­களில் இடம்­பெ­றக்­கூ­டிய ஆறு பிடிஓ திட்ட வீடு­க­ளுக்கான தேவை­ சரி­ச­ம­மாக இருப்­ப­தாக தெரி­கிறது.

அவற்­றில் தெங்­கா­வில் கட்­டப்­படும் கார்­டன் வாட்­டர்­ஃபி­ரண்ட் I மற்­றும் II திட்ட வீடு­க­ளுக்கு அதிக தேவை இருக்­கும்­போல் தெரி­கிறது.

இந்த வீடு­கள், சிங்­கப்­பூ­ரில் முதல்முறை­யாக நடு நடுவே உத்­த­ரங்­கள் இல்­லா­மல் வடி­வ­மைக்­கப்­பட்டு கட்­டப்­படும் வீடு­க­ளாக இருக்­கின்­றன.

நவம்­ப­ரில் விற்­ப­னைக்கு வந்­துள்ள இந்த வீடு­க­ளுக்கு மனு செய்­யும் விண்­ணப்­ப­தா­ரர்­கள் மூன்­றாண்டு நான்கு மாதம் காத்­தி­ருந்­தால் போதும்.

ஈசூ­னில் இடம்­பெ­றும் மூன்று பிடிஓ திட்­டங்­களில் கட்­டப்­படும் நான்­கறை, ஐந்­தறை வீடு­க­ளுக்கு அவ்­வ­ள­வா­கத் தேவை­யில்லை.

ஆகை­யால், விண்­ணப்­பிக்­கும் பெரும்­பா­லா­ன­வர்­க­ளுக்கு வீடு கிடைத்­து­வி­டும்.

நவம்­ப­ரில் விற்­ப­னைக்கு வந்­துள்ள வீடு­களை வாங்க முதல்­முறை­யாக விண்­ணப்­பித்து இருப்­போ­ரில் பெரும்­பா­லா­னோ­ருக்கு வீட்டை முன்­ப­திவு செய்­வ­தற்­கான வரிசை எண் கிடைத்­து­வி­டக்­கூ­டிய வாய்ப்பு இருப்­ப­தா­கத் தெரி­கிறது.

அதா­வது பெரும்­பா­லா­ன­வர்­களுக்கு வீடு கிடைத்­து­வி­டும் என்று நம்­ப­லாம். ஆனால், காலாங் ஹொரைசன் பிடிஓ திட்­டம் இதற்கு விதி­வி­லக்கு.

வீவக வீடு இணைய வாயி­லில் நேற்று இரவு 11.59 மணி­யு­டன் விண்­ணப்­பங்­க­ளுக்­கான காலக்­கெடு முடிந்­தது. வீடு­கள் குலுக்­கல் முறை­யில் ஒதுக்­கப்­படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!