கலை, கலாசாரம் முக்கியம்: அதிகமானோர் கருத்து

கிரு­மிப் பர­வ­லுக்­குப் பிறகு, உள்­ளூர் கலை கலா­சா­ரம் ஆறு­தல் பெறு­வ­தற்­கும் இளைப்­பா­று­வ­தற்­கும் முக்­கி­யம் என்­பதை கூடு­த­லா­னோர் உணர்­வ­தாக தேசிய கலை­கள் மன்­றம் கூறி­யுள்­ளது.

பத்து சிங்­கப்­பூ­ரர்­களில் எட்­டுப் பேர் உள்­ளூர் கலைச் சூழல் குறித்து பெருமை அடை­வ­தா­கக் கூறி­னர். கலை­கள் குறித்து மன்­றம் நடத்­தி­யுள்ள ஆக அண்­மைய கருத்­தாய்­வில் அது தெரிய வந்­தது.

ஜன­வரி முதல் மார்ச் வரை நடத்­தப்­பட்ட ஆய்­வில் 2,047 சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் கலந்­து­கொண்­ட­னர். உள்­ளூர் கலைச் சூழல் துடிப்­பாய் இருப்­ப­தா­கக் கரு­து­வோ­ரின் எண்­ணிக்கை குறைந்­தது. ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்ட கால­கட்­டத்­தில், கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் முழு­மை­யாக நீக்­கப்­ப­ட­வில்லை என்­பது அதற்­குக் கார­ண­மாக இருந்­தி­ருக்­க­லாம்.

மற்­ற­வர்­க­ளைப் புரிந்­து­கொள்­வ­தற்­கும் சுய­வெ­ளிப்­பாட்­டுக்­கும் கற்­ப­னை­யைத் தூண்­டு­வ­தற்­கும் கலை­கள் பயன் அளிப்­ப­தா­கக் கரு­தி­யோ­ரும் குறைந்­த­னர்.

கலை குறித்த அந்த மக்­கள்­தொகை கருத்­தாய்வை தேசிய கலை­கள் மன்­றம் ஈராண்டு களுக்கு ஒரு முறை நடத்­து­கிறது.

முந்­தைய ஆண்­டு­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது இம்­முறை கருத்­தாய்­வில் பெறப்­பட்ட முடி­வு­கள் மாறு­பட்­டடுள்ளது என்று தேசிய கலைகள் மன்­றம் சுட்­டி­யது.

ஈராண்­டு­க­ளாக கலை சார்ந்த பெரும்­பா­லான நிகழ்ச்­சி­கள் இணை­யம் வழி­யாக அல்­லது நேர­டி­யா­க­வும் இணைய வழி­யா­க­வும் கலந்து ஏற்­பாடு செய்­யப்­பட்டு வரு­வது அதற்கு முக்­கிய கார­ணம் என்று மன்றம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!