கெரோசெல் நிறுவனத்தின் 110 ஊழியர்கள் ஆட்குறைப்பு

சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த இணை­யத்­த­ளச் சந்­தை­யான கெரோ­செல், 110 ஊழி­யர்­களை நேற்று முன்­தி­னம் ஆட்­கு­றைப்பு செய்­தி­ருக்­கிறது. இது அதன் ஊழி­யர் அணி­யில் 10 விழுக்­கா­டா­கும்.

வளர்ச்சி குறை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால் செல­வு­க­ளைக் குறைப்­ப­தற்கு அந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

சில வர்த்­த­கப் பிரி­வு­கள் மட்­டும் ஆட்­கு­றைப்­பால் பாதிக்­கப்­படும் என்று கெரோ­செல் நிறு­வ­னத்­தின் இணை நிறு­வ­ன­ரும் தலைமை நிர்­வா­கி­யு­மான குவெக் சியு ருய் ஊழி­யர்­க­ளுக்கு அனுப்­பிய மின்­னஞ்­ச­லில் தெரி­வித்­தார்.

எத்­தனை வர்த்­த­கப் பிரி­வு­களில் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­டது என்­ப­தை­யும் சிங்­கப்­பூ­ரில் எத்­தனை ஊழி­யர்­கள் ஆட்­குறைப்பு செய்­யப்­பட்­ட­னர் என்­ப­தை­யும் அவர் தெரி­விக்­க­வில்லை.

எனினும் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்ட பணி­களில் 50 விழுக்­காடு சிங்­கப்­பூ­ரில் செயல்­பட்­ட­தாக நிறு­வ­னத்­தின் பேச்­சா­ளர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­னார்.

ஆட்­கு­றைப்­புக்கு மன்­னிப்­புக் கேட்­டுக் கொண்ட திரு குவெக், அதற்கு தனிப்­பட்ட பொறுப்பு ஏற்­றுக்கொள்­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.

ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்ட வழக்­க­மான ஊழி­யர்­க­ளுக்கு குறைந்­தது மூன்று மாதச் சம்­ப­ள­மும் அவர்­கள் வேலை செய்த நேரத்­துக்கு வழங்­கப்­படும் விடுப்­புக்கு பதில் ரொக்­கத் தொகை அளிக்­கப்­படும். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அடுத்தாண்டு ஜூன் இறுதிவரை மருத்­துவ அனு­கூலங்­கள் கிடைக்­கும்.

கிரு­மிப் பர­வல் முடக்­க­நிலை அகற்­றப்­பட்­டதை அடுத்து, வர்த்­த­கத்தை மேம்­ப­டுத்த கெரோசெல் நிறுவனம் அவ­ச­ர­மாக புதிய ஊழி­யர்­களை சேர்த்து புதிய குழுக்­களை உரு­வாக்­கி­ய­தாக திரு குவெக் கூறி­னார்.

செல­வுக்கு ஏற்ற வரவு இல்லை என்ற அவர், ஊழி­யர்­கள் அதி­க­ரித்­த­தால் முடி­வு­க­ளி­லும் ஒருங்­கி­ணைப்­பி­லும் குழப்­பம் ஏற்­பட்­ட­தா­க­வும் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!