உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் ஐ-வாக் நிகழ்ச்சி

ஆ. விஷ்ணு வர்­தினி

உடற்­ப­யிற்சி செய்­யத் தொடங்க நினைப்­ப­வர்­கள், எளிய நடைப்­ பயிற்சி செய்­யும் அதே நேரத்­தில் நிதி உதவி தேவைப்­படும் நோயா­ளி­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் வாய்ப்­பைத் தரு­கிறது சிங்­ஹெல்த் சமூக மருத்­து­வ­ம­னை­யின் (எஸ்.சி.எச்) ஐ வாக் நிகழ்ச்சி.

ஆண்­டு­தோ­றும் ஏற்­பாடு செய்­யப்­படும் 'ஐ-வாக்' மெய்­நி­கர் உடற் பயிற்சி நிகழ்ச்சி, வரும் 16ஆம் தேதி வரை நடை­பெ­றும்.

இணை­யத்­தில் பதிவு செய்­து,­இருக்­கும் இடத்­தி­லி­ருந்து உடற்­ ப­யிற்­சி­களில் கலந்­து­கொள்­ள­லாம். வெவ்­வேறு உடற்­ப­யிற்சி சவால்­க­ளைக் கொண்­டுள்ள ஐ-வாக் நிகழ்ச்­சி­யில், மிதி­வண்டி ஓட்­டும் பிரி­வும் புதி­தா­கச் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

ஓட்­டம் அல்­லது நடை­ப்ப­யிற்சி, மிதி­வண்டி ஓட்­டு­தல், அல்­லது மூன்று­ வ­கைப் பயிற்­சி­க­ளி­லும் கலந்­து­கொள்­ளு­தல் என்று மூன்று பிரி­வு­கள் உள்­ளன. அவற்­றில் குழு­வா­கவோ தனி­ந­ப­ரா­கவோ கலந்­து­கொண்டு பரி­சு­கள் வெல்­ல­லாம். தனி­யா­கவோ நண்­பர்­க­ளு­டன் அல்­லது குடும்­பத்­தா­ரு­டன் இணைந்தோ உடற்­ப­யிற்சி செய்­ய­வும் ஐ-வாக் ஊக்­கு­விக்­கிறது.

சிங்­ஹெல்த் சமூக மருத்­துவ மனை­யின் நோயா­ளி­க­ளுக்கு எஸ்.சி.எச் சுகா­தார நிதி­யின்­மூ­லம் ஆத­ர­வ­ளிப்­ப­தும் நிகழ்ச்­சி­யின் நோக்­கம். ஐ-வாக் நிகழ்ச்­சி­யின் மூலம், நிதி­யு­தவி தேவைப்­படும் நோயாளிகளுக்கு பணம் திரட்­டப்­படும். ஆய்வு, மருத்­து­வப் பரா­ம­ரிப்பு முத­லிய திட்­டங்­க­ளுக்­கும் அத்­தொகை கைகொ­டுக்க கூடும்.

ஐ-வாக்­கில் பதிவு செய்­து­கொள்ள: https://web.42race.com/race-bundle/iwalk2022.

டிசம்­பர் 8ஆம் தேதி வரை முன் பதிவு செய்­து­கொள்­ள­லாம்.

அமர்ந்தே இருக்­கும் பெரி­ய­வர்­களும் அதிக நட­மாட்டம் இல்லாத மூத்­தோ­ரும் நடைப்­ப­யிற்­சியை வழக்­க­மாக்­கிக்கொண்­டால் பலன் பெற­லாம் என்­றார், ஊட்­ரம் சமூக மருத்­து­வ­ ம­னை­யைச் சேர்ந்த மூத்த உட­லி­யக்க மருத்­து­வ­ரான கணே­சன் கார்த்­தி­கே­யன்.

சுகா­தார மேம்­பாட்டு வாரி­யத்­தின் தேசிய உடற்­ப­யிற்சி வழி முறை­கள், பெரி­யவர்களும் மூத்­தோ­ரும் வாரத்­துக்கு 150 நிமி­டங்­கள் நடுத்­தரம் முதல் கடு­ம் நட­வ­டிக்­கை­க;ள வரையில் ஈடு­ப­ட­லாம் என்று பரிந்­து­ரைப்­ப­தை அவர் சுட்­டி­னார்.

ஒரு மணி­நே­ரத்­துக்கு குறைந்­த­பட்­சம் 4 கிலோ­மீட்­டர் வேகத்­தில் நடப்­பது நடுத்­தர தீவி­ர­மு­டைய நட­வ­டிக்­கை­யாக கரு­தப்­ப­டு­கிறது. இதை கருத்­தில் கொண்டு, வாரம் ஐந்து நாள்­க­ளுக்கு நாள்­தோ­றும் அரை மணி­நே­ரம் விரைவு நடை மேற்­கொள்­ள­லாம் என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!