மருத்துவர்கள் இருவருக்கு தண்டனை அதிகரிப்பு

பெண் நோயாளி ஒரு­வ­ரைத் தங்­கள் சுய­ந­லத்­திற்­குப் பயன்­ப­டுத்தி அவ­ரு­டன் பாலி­யல் உற­வு­கொள்ள சதித் திட்­டம் தீட்­டிய இரண்டு மருத்­து­வர்­க­வர்கள் கூடுதல் காலம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மன­நல மருத்­து­வர் சான் ஹெர்ன் நியோங்­கி­டம் அந்­தப் பெண்­ணின் தனிப்­பட்ட விவ­ரங்­களைப் பெருங்­கு­டல் மருத்­துவ நிபு­ணர் டாக்டர் ஜூலி­யன் ஓங் அனுப்­பி­வைத்­தார்.

தயங்­கா­மல் அந்­தப் பெண்­ணைப் பாலி­யல் ரீதி­யா­கப் பயன்

­ப­டுத்­திக்­கொள்­ளும்­படி டாக்டர் சானி­டம் டாக்­டர் ஓங் தெரி­வித்­தார். டாக்­டர் ஓங்­ இரண்டு ஆண்டுகளுக்குப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டாக்­டர் ஓங்­கி­டம் சிகிச்சை பெற்ற அந்­தப் பெண்­ணு­டன் டாக்­டர் சான் தொடர்­பு­கொண்­டார். சொத்து முக­வ­ரான அப்­பெண்­ணி­டம் வீடு வாங்­கு­வது போல நடித்து அவ­ரி­டம் பேசி­னார். ஆனால் அப்­பெண்ணை அவர் சந்­திக்­க­வில்லை. அவ­ர் ஒன்­றரை ஆண்டுகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முத­லில் விதிக்­கப்­பட்ட தண்­டனை போதாது என்று சிங்­கப்­பூர் மருத்­துவ மன்­றம் மேல்­மு­றை­யீடு செய்த பிறகு இந்த இரண்டு

மருத்­து­வர்­க­ளுக்­கான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீதி

­மன்­றம் நேற்று விதித்­தது.

இதற்கு முன்பு இரு மருத்­து­வர்­களும் நிபு­ணத்­துவ ஒழுங்

­கீ­னத்­து­டன் நடந்­து­கொண்­ட­தாக நிரூ­பிக்­கப்­பட்டது. டாக்­டர் ஓங்­எட்டு மாதங்களுக்குப் பணியிடை நீக்­க­ம் செய்யப்பட்டுள்ளார். டாக்­டர் சான் ஐந்து மாதங்களுக்குப் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

மருத்­து­வர்­க­ளுக்கு எதி­ராக டாக்­டர் சானின் முன்­னாள் காதலி திரு­வாட்டி செரின் தியோங் 2018ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூர் மருத்­துவ மன்­றத்­தி­டம் புகார் செய்­தார். இரண்டு மருத்­து­வர்­களும் தங்­கள் முறை­யற்ற பாலி­யல் அனு­ப­வங்­க­ளைப் பற்றி பெரு­மை­யா­கப் பேசிக்­கொள்­ளும் வகை­யில் அமைந்த வாட்ஸ்­அப் தக­வல்­க­ளைப் பார்த்த பிறகு திரு­வாட்டி தியோங் புகார் செய்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!