உணவு, பானத்துறை மீட்சி; வாடிக்கையாளர் திருப்தி சரிவு

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை

கட்­டுப்­பா­டு­கள் தளர்்­த்­தப்­பட்­டதை அடுத்து, சிங்­கப்­பூ­ரில் உள்ள

உண­வு, பானக் கடை­கள் மீண்­டும் வழக்­க­நி­லைக்­குத் திரும்பி உள்­ளன.

இதை­ய­டுத்து, உண­வகங்­களில் உண­வ­ருந்­தும் வாடிக்­கை­யா­ளர்­

க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

இருப்­பி­னும், உண­வகங்­களில் தயா­ரிக்­கப்­படும் உணவு, அவற்­றின் சேவை­கள் குறித்து வாடிக்­கை

­யா­ளர்­க­ளின் திருப்­தி­நிலை சரிந்­துள்­ளது.

உண­வைப் பொட்­ட­லம் கட்­டு­தல், உணவு விநி­யோ­கம் ஆகி­யவை தொடர்­பான சேவை­கள் குறித்து வாடிக்­கை­யா­ளர்­கள் பலர் அதி­ருப்தி தெரி­வித்­துள்­ள­னர்.

சிங்­கப்­பூர் வாடிக்­கை­யா­ளர் திருப்­தி­நிலை குறீ­யீடு ஆய்வு மூலம் இவை தெரி­ய­வந்­துள்­ளன.

இந்த ஆய்­வின் முடி­வு­கள் நேற்று வெளியி­டப்­பட்­டன.

இந்த வரு­டாந்­திர ஆய்வை சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உள்ள உன்­னத சேவைப்

பயிற்­சிக்­க­ழ­கம் நடத்­தி­யது.

உணவு, பானத்­துறை மற்­றும் சுற்­றுப்­ப­ய­ணத்­துறை ஆகி­யவை தொடர்­பான வாடிக்­கை­யா­ளர்­க­ளின் திருப்­தி­நிலை குறித்து அறிய இந்த ஆய்வு உத­வு­கிறது.

கடந்த ஜூலை மாதத்­துக்­கும் செப்­டம்­பர் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் நடத்­தப்­பட்ட இந்த ஆய்­வில் மொத்­தம் 2,600 பேர் பங்­கேற்­ற­னர்.

அண்­மை­யில் உண­வ­கங்­களில் உண­ய­வ­ருந்­தி­ய­தாக ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் 59.4 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­தி­னர்.

ஓராண்­டுக்கு முன்பு இந்த விகி­தம் 34.8 விழுக்­கா­டாக இருந்­தது.

உண­வ­கங்­களில் உண­வ­ருந்த தேர்வு செய்­த­வர்­க­ளின் விகி­தம் 46.4 விழுக்­காட்­டி­லி­ருந்து 74.2 விழுக்­கா­டாக உயர்ந்­தது.

விரைவு உணவு உண­வகங்­களில் உண­வ­ருந்த தேர்வு செய்­த­வர்­க­ளின் விகி­தம் 21.5 விழுக்­காட்­டி­லி­ருந்து 44.7 விழுக்­கா­டாக அதி­

க­ரித்­தது.

காப்­பிக்­க­டை­களில் உண­வ­ருந்த தேர்வு செய்­த­வர்­க­ளின் விகி­தம் 35 விழுக்­காட்­டி­லி­ருந்து 52 விழுக்­கா­டாக ஏற்­றம் கண்­டது.

0லிருந்து 100 புள்­ளி­கள் வரை திருப்­தி­நிலை அள­வி­டப்­பட்­டது.

விரைவு உண­வக உண­வகங்­களில் உண­வ­ருந்­திய வாடிக்­கை­யா­ளர்­க­ளின் திருப்­தி­நிலை ஆண்டு அடிப்­ப­டை­யில் 2.8 விழுக்­காடு குறைந்து 71.9 புள்­ளி­க­ளா­கப் பதி­வா­னது.

உண­வகங்­களில் சாப்­பிட்­டோ­ரின் திருப்­தி­நிலை 1.9 விழுக்­காடு குறைந்து 71.6 விழுக்­கா­டா­கச் சரிந்­தது.

ஆனால் காப்­பிக்­க­டை­களில் சாப்­பிட்­டோ­ரின் திருப்­தி­நிலை மட்­டும் 1.5 விழுக்­காடு உயர்ந்து 70.6 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில், உண­வ­கத்­தில் உண­வ­ருந்­தி­யது, உண­வைப் பொட்­ட­லம் கட்டி வீட்­டிற்­குக் கொண்­டு­போய் சாப்­பிட்­டது, உணவு விநி­யோ­கம் ஆகி­யவை தொடர்­பான அனு­ப­வங்­கள் திருப்தி அளிக்­க­வில்லை என்று கூடு­தல் வாடிக்­கை­யா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இவை தொடர்­பான திருப்­தி­நிலை 3.4 விழுக்­காடு குறைந்து 74.4 புள்­ளி­க­ளா­கப் பதி­வா­னது.

உண­வைப் பொட்­ட­லம் கட்­டும் சேவை குறித்து பெரும்­பா­லான வாடிக்­கை­யா­ளர்­கள் அதி­ருப்தி தெரி­வித்­த­னர்.

உணவு வாங்­கும்­போது ஏற்­படும் அனு­ப­வங்­கள், உண­வ­கங்­க­ளின் ஊழி­யர்­கள் வழங்­கும் சேவை குறித்து பலர் அதி­ருப்தி தெரி­வித்­த­னர்.

உணவு விநியோகம் குறித்­தும் ஆய்­வில் பங்­கெ­டுத்த பல வாடிக்­கை­யா­ளர்­கள் அதி­ருப்தி தெரி­வித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!