பீச் ரோடு கொலை: குற்றம் சுமத்தப்பட்ட ஆடவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்

கொலை வழக்­கில் குற்­றம் சுமத்­தப்­பட்ட ஒரு­வர் சாங்கி பொது

மருத்­து­வ­ம­னை­யிலிருந்து புதன்­

கி­ழமை விடு­விக்­கப்­பட்­டார்.

50 வய­து கேலப் ஜோஷுவா சாய் சண்­மு­கம், தமது வர்த்தகப் பங்காளியைக் கொலை செய்துவிட்டு சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து தப்­பிச் சென்­றதாகக் கூறப்­ப­டு­கிறது.

புதுப்­பிப்புப் பணி நிறு­வன இயக்­கு­ந­ரான அவர் மத்­திய காவல்­துறை பிரி­வில் ஒரு வாரம் விசாரணைக் காவலில் வைக்கப்படுவார் என்று கூறப்­பட்­டது. அவர் மருத்­து­வ­

ம­னை­யில் அனு­ம­திக்­க­ப்பட்ட கார­ணம் என்ன என்­பது குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

கடந்த மாதம் 18ஆம் தேதியன்று கொலைக் குற்­றம் சுமத்­தப்­பட்ட சாய், விசா­ர­ணை­யில் உத­வு­வார் என்று காவல்­துறை கூறி­யது.

நேற்று நடந்த நீதி­மன்ற விசா­ர­ணை­யின்­போது, சாய் தனது மனை­வி­யு­டன் பேச அனு­ம­திக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டார். ஆனால் அவ­ரது கோரிக்­கையை நிரா­க­ரித்த நீதி­பதி டெரன்ஸ் டே, இதுகுறித்து விசா­ரணை அதி­கா­ரி முடிவு செய்ய வேண்­டும் என்று கூறி­னார்.

கடந்த மாதம் 9ஆம் தேதி இரவு 7 மணி­ய­ள­வில் புளோக் 2 பீச் ரோட்­டில் உள்ள தரைத்­தள வீட்­டில் 27 வய­து ஆங் குய் யிங்கை சாய் கொலை செய்­தார் என்று அவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

சாய்­யும் ஆங்­கும் ஸ்மார்ட் கிளிக் சேவை­கள் நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர்­கள்.

ஆங் கடந்த மாதம் 9ஆம் தேதியன்று காணா­மல் போன­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்பு தெரி­வித்­தி­ருந்­தது.

ஆங்­கைக் கொன்­ற­தா­கக் கூறப்­படும் சாய், கடந்த மாதம் 10ஆம் தேதியன்று மலே­சி­யா­வுக்­குச் சென்­றார்.

மலேசியக் காவல்­து­றை­யின் உத­வி­யு­டன், சாய் கடந்த மாதம் 16ஆம் தேதி ஜோகூர் பாரு­வில் பிடி­பட்டு சிங்­கப்­பூர் காவல்­து­றை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!