சமூகச் சமநிலையைச் சாதித்து சாதனை படைத்த நாடாளுமன்றம்

சிங்­கப்­பூர், எவ்­வ­ள­வு­தான் உல­கம் தழு­வி­ய­தாக, புது புது பாணி­க­ளைத் தழு­விக்­கொள்­கின்ற, அதி நவீன நாக­ரீக நாடாக இருந்­தா­லும் ஆண்-பெண் இரு­வருக்­கும் இடை­யி­லான திரு­மண, குடும்ப உறவை, பாசப் பிணைப்பை அடிப்­ப­டை­யா­கக்கொண்ட சமூகம்­தான் வாழையடிவாழையாக இருந்து வரு­கிறது.

சிங்­கப்­பூர் சமூ­கம் இதில்­தான் மையம் கொண்டு இயங்­கு­கிறது. இதன் அடிப்­ப­டை­யில்தான் அது கட்­ட­மைக்­கப்­பட்டு உள்­ளது.

இந்­தக் குடும்ப அமைப்பு முறையை வைத்­து­தான் பொது­வில் நன்மை பயக்­கக்­கூ­டிய பொதுக் கொள்­கை­கள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன. பொது வீடமைப்புக் கொள்­கை­கள் இதற்கு ஒரு சான்று. திரு­ம­ண­மான தம்­ப­திக்­குத்­தான் அந்தக் கொள்கை முன்­னு­ரிமை கொடுக்­கிறது.

பிள்­ளையைத் தத்து எடுத்­துக்­கொள்­வ­தா­னாலும் சரி, ஊட­கங்­களில் எவை எவை ஏற்­றுக்கொள்­ளத்­தக்­கவை என்­ப­தைத் தீர்­மா­னிக்­கும் வழி­காட்டி நெறி­மு­றை­க­ளாக ஆனா­லும் சரி, பள்­ளிக்­கூ­டங்­களில் இரு­மொ­ழிக் கொள்கை ஏற்­பாடு, பிள்­ளை­களுக்­குப் போதிக்­கப்­படும் பாடங்­கள் ஆனா­லும் சரி எல்­லாமே இந்த ஆண்-பெண் குடும்ப சமூ­கக் கட்­ட­மைப்பை மையப்­ப­டுத்­தித்­தான் வரை­ய­றுக்­கப்­படு­கின்­றன, செயல்­படுகின்­றன.

குடி­மக்­க­ளுக்கு இவை விரும்­பிய பலன்­களை தந்து வரு­கின்­றன. இத்­த­கைய பாரம்­ப­ரி­யத்­தில் பிறந்து வள­ரும் பிள்­ளை­களே சமூ­கத்­தின் முதுகு எலும்­பாக இருந்­து­ வ­ரு­கி­றா­ர்கள். இவை தொடர்ந்து வலு­வா­கக் கட்­டிக்­காக்­கப்­பட வேண்­டி­யவை. இது­தான் பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­க­ளின் விருப்­பம்.

இது ஒரு­பு­றம் இருக்க, எந்த ஒரு சமூகத்திலுமே வேறு ஒரு வகை­யானவர்­களும் இருக்­கவே செய்­வார்­கள். அவர்­கள் இயற்­கைக்கு மாறாக, ஆண்-ஆண் உறவை நாடு­ப­வர்­க­ளாக, விரும்­புவோ­ராக, ஒரு­பால்­பு­ணர்ச்­சி­யா­ளர்­க­ளாக இருப்­பார்­கள்.

இத்­த­கைய ஒரு போக்கு ஆண்-பெண் குடும்ப உறவைக் கெடுத்­து­வி­டும் என்­ப­தால் ஆண்-­ஆண் உறவு என்­பது சட்­ட­வி­ரோ­த­மா­னது; அத்­த­கைய செயல்­களில் ஈடு­ப­டு­வோரைக் குற்­ற­வாளிகளாக ஆக்கி வழி­வ­ழி­யான ஆண்-பெண் குடும்ப வாழ்க்கை முறையைக் கட்­டிக்­காக்க வேண்டும் என்­ப­தற்­காவே, சிங்­கப்­பூர் பிரிட்டிஷ் கால­னி­யாக இருந்தபோதே சட்­ட­பூர்­வ­மான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டன.

அர­ச­மைப்­புச் சட்­டத்­தில் 377ஏ என்ற ஒரு பிரிவு இதற்­கா­கவே ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. ஆண்-ஆண் உறவை அந்­தப் பிரிவு ஒரு குற்­றச்செயல் என்று வரை­ய­றுத்­தது.

அதேவேளையில், தங்­களைச் சட்­ட­வி­ரோ­தி­களா­கக் கரு­தக்­க­கூ­டாது என்று ஆண்-ஆண் உறவை விரும்­பும் ஓரி­னப் புணர்ச்­சி­யா­ளர்­கள் காலம் கால­மாகவே குரல் கொடுத்து வந்தார்கள்.

இவர்­களில் பெரும்­பா­லா­னவர்­கள் சட்­டங்­களை மீறாமல் நடப்­ப­வர்­கள், மற்­ற­வர்­க­ளுக்­குப் பாத­க­மாக எதை­யும் செய்­யா­த­வர்­கள். அமை­தி­யாக, வெளியே தெரி­யா­த­படி அடக்க ஒடுக்கமாக வாழ்ந்­து­விட்­டு­போ­கவே இவர்­கள் விரும்புகிறார்­கள்.

ஆனால் 377ஏ நடப்­பில் இருப்­ப­தால் பயந்­து­பயந்து குற்­ற­வாளிகளா­கவே தாங்­கள் வாழ­வேண்டி இருக்­கி­றதே என்று கவ­லைப்பட்ட­வர்­கள்.

காலம் எவ்­வ­ளவோ மாறி­விட்­டது. சமூ­கத்­தின் ஓர் அங்­க­மாக இருக்­கின்ற இத்­த­கைய மக்­க­ளின் கோரி­க்கை­யைச் செவி­ம­டுக்க காலம் கனிந்­து­விட்டதை அறிந்து, சிங்­கப்­பூரை ஆட்­சி­பு­ரிந்த பிரிட்டன்­கூட தனது சட்­டப் பிரிவை நீக்கி இத்­தகைய ஓரினப் புணர்ச்­சி­யா­ளர்­கள் குற்­ற­வா­ளி­கள் அல்லர் என்று அறி­வித்துவிட்­டது.

சிங்­கப்­பூ­ரும் இதற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்டு பொது­மக்­க­ளின் கருத்­து­களை எல்­லாம் கவ­னத்­தில் கொண்டு கடை­சி­யில் ஆண்-ஆண் உற­வாளர்­களைக் குற்­ற­வா­ளி­கள் அல்­லர் என்று சட்­டம் இயற்றி இருக்­கிறது.

அத்­த­கைய ஓரினப் புணர்ச்­சி­யாளர்களைக் குற்­ற­வா­ளி­கள் என்று கூறும் அர­ச­மைப்­புச் சட்டத்தின் 377ஏ பிரிவை சிங்­கப்­பூர் ரத்து செய்து இருக்­கிறது.

அதே­வே­ளை­யில், இதை வைத்து யாரும் குடும்ப உறவு வரை­யறையைக் கெடுத்­து­வி­டக்கூடாது, கெடுத்­து­விட முடி­யாது என்­ப­தை­யும் மிக விவே­க­மாக நாடாளுமன்றம் உறு­திப்­ப­டுத்தி இருக்­கிறது.

ஆண்-ஆண் ஓரி­னப் புணர்ச்­சி­யாளர்­களைக் குற்­ற­வா­ளி­கள் அல்ல என்று அர­ச­மைப்­புச் சட்ட ரீதி­யில் அறி­விக்­கும் பட்­சத்­தில், அவர்­கள் அதை அடிப்­ப­டை­யா­கக்கொண்டு வழி­வ­ழி­யான ஆண்- பெண் குடும்ப உறவை எதிர்த்து அர­ச­மைப்­புச் சட்­டத்­தையே அசைத்துப் பார்க்­கும் அள­வுக்கு நீதி­மன்­றத்தை நாடக்­கூ­டும் என்ற அச்­சம் தலை­தூக்கவே செய்­யும்.

இந்த அச்­சத்தை அறவே துடைத்­தொ­ழிக்­கும் வகை­யில், மிக விவேகமாகச் செயல்­பட்டு ஆண்- பெண் அடிப்­ப­டை­யி­லான வழி­வ­ழி­யான குடும்ப உறவை எதிர்த்து யாருமே நீதி­மன்­றத்தை அணுக இய­லா­த­படி நாடாளுமன்றம் அர­ச­மைப்­புச் சட்­டத்தை உறு­திப்­ப­டுத்தி இருக்­கிறது.

இதற்காகவே 156வது உட்பிரிவு என்ற ஒரு புதிய அம்­சத்தை மன்றம் அர­ச­மைப்­புச் சட்­டத்­தில் சேர்த்து இருக்­கிறது.

நாடு எவ்­வ­ளவு முன்­னே­றி­னா­லும் ஆண்-பெண் திரு­ம­ணம், அந்த உறவை அடிப்­படை­யாக வைத்து உரு­வா­கும் குடும்­பம் ஆகிய வழி­வழி­யான ஏற்­பாடு­கள் சட்­டத்­தின்­படி மிக வலு­வாக கட்­டிக்­காக்­கப்­படும் என்ற உறு­தியை மக்­க­ளுக்கு அர­சாங்­கம் திட்­ட­வட்­ட­மாக இதன்­மூ­லம் வழங்கி இருக்­கிறது.

இதற்­கான வழியை வகுத்து சமூ­கத்­தில் அரு­மை­யான ஒரு சம­நிலையை நாடா­ளு­மன்­றம் சாதித்து இருக்­கிறது. ஓரினப் புணர்ச்­சி­யா­ளர்­களைச் சட்­ட­வி­ரோ­த­மா­ன­வர்­க­ளாகக் கரு­தக்­கூ­டாது. அதே­வேளை­யில், இப்­போ­தைய திருமண வரை­ய­றையைக் கட்டிக்காக்க வேண்­டும். சிங்­கப்­பூ­ரர்­கள் வாக்­களித்து தேர்ந்­தெ­டுத்து இருக்­கும் நாடா­ளு­மன்­றம் மிகப் பொறுப்­பு­டன் செயல்­பட்டு இதைச் சாதித்துள்ளது.

377ஏ பிரிவை அகற்ற வேண்­டும் என்­ப­தற்கு ஆத­ர­வாக 93 உறுப்­பி­னர்­கள் குரல்­கொ­டுத்­தார்­கள். அதே­போல, 156வது உட்பிரிவை அறி­மு­கப்­ப­டுத்­தும் வகை­யில் அர­ச­மைப்­புச் சட்­டத்­தில் திருத்­தங்­க­ளைச் செய்ய வேண்­டும் என்பதை ஆதரித்து 85 உறுப்­பி­னர்­கள் பேசினர்.

ஓரினப் புணர்ச்­சி­யா­ளர்­க­ளின் கவ­லை­க­ளைப் போக்க வேண்­டும். இது காலத்­திற்கு ஏற்ற ஒன்று­தான். அதோடு, வழி­வ­ழி­யாக குடி­மக்­களுக்கு நற்­பயன் அளித்து வரும் கொள்­கை­க­ளை­யும் கட்­டிக்­காக்க வேண்­டும்.

இவை இரண்­டை­யும் சாதிக்­கும் வகை­யில் சம­நிலை ஒன்­றைக் காண­வேண்­டும். இதைத்­தான் நாடா­ளு­மன்­றம் செம்­மை­யாகச் சாதித்து இருக்­கிறது. இந்த முடிவு பெரும்­பா­லான மக்­க­ளைப் பொறுத்­த­வரை வர­வேற்­கத்­தக்க ஒன்­றாக இருக்கும் என்­பதில் ஐய­மில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!