பள்ளிப் பேருந்து கட்டணம் 2023ல் உயர்வு; நிறுவனங்கள் விளக்கம்

சிங்­கப்­பூ­ரில் பள்­ளிக்­கூடப் பேருந்து கட்டணம் அடுத்த ஆண்டு கூடும். அந்­தக் கட்­டண உயர்வு 10% வரை அதா­வது $15 வரை இருக்­கும் என்று தெரிகிறது.

இந்த நிலை­யில், செலவு அதி­க­ரித்து விட்­ட­தால் கட்­ட­ணத்தை உயர்த்­த­வேண்­டிய தேவை இருப்­ப­தாக சேவையை நடத்தும் நிறு­வ­னங்­கள் தெரி­விக்­கின்­றன.

பள்­ளிக்­கூ­டங்­க­ளு­டன் உடன்­பா­டு களைச் செய்­து­கொண்டு சேவை வழங்கும் நிறுவனங்­கள், 2023 ஜன­வரி முதல் ஒரு முறை 7% வரை கட்­ட­ணத்தை உயர்த்த அனுமதிக்­கப்­படும் என்று கல்வி அமைச்சு கடந்த ஆகஸ்ட் மாதம் தெரி­வித்­தது.

கூடு­தல் செல­வை பெற்­றோர் சமா­ளிக்க குடும்­பங்­கள் உதவி பெறுவதற்­கான வரு­மான வரம்பை கல்வி அமைச்சு திருத்தி உள்­ளது. 2023 முதல் தனது நிதி உதவித்­திட்­டத்­தின் கீழ் மாண­வர்­க­ளுக்கு அதிக ஆத­ரவை அது வழங்க இருக்­கிறது.

இத­னி­டையே, பள்­ளிக்­கூ­டத்­து­டன் செய்து கொண்­டுள்ள புதிய இரண்­டாண்டு உடன்­பாட்­டின்­படி $15 கட்­ட­ணத்தைத் தான் உயர்த்­து­வ­தாக ஸ்டெட்­ஃபாஸ்ட் டிரான்ஸ் போர்ட் என்ற நிறு­வ­னம் தெரி­வித்­தது.

இது பற்றிக் கருத்து தெரி­வித்த சிங்­கப்­பூர் பள்­ளிக்­கூட மற்­றும் தனி­யார் வாடகைப் பேருந்து உரி­மை­யா­ளர்­கள் சங்கம், தன் உறுப்­பி­னர்­களும் பள்­ளிக்­கூடங்­களும் நிர்­ண­யித்­துக்­கொள்­ளும் கட்டண விகி­தத்­தை தான் கண்­கா­ணிப்­ப­தில்லை என்று தெரி­வித்­தது.

இதைப் பொறுத்தவரை போட்டித்தன்மை மிக்க ஒப்பந்தப்புள்ளி முறை நடப்பில் இருப்பதாக அது குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!