கரிமக் குறைப்பு பணிகளுக்கு ஊழியரை உருவாக்க முயற்சி புதிய வாழ்க்கைத்தொழில் மாற்றுச் செயல்திட்டம் தொடக்கம்

சிங்­கப்­பூர் ஊழி­யர் அணி அமைப்பு தன்­னு­டைய முத­லா­வது வாழ்க்­கைத்தொழில் மாற்றுச் செயல்­திட்­டத்­தைத் தொடங்கி இருக்­கிறது.

அந்­தச் செயல்­திட்­டம், 200 ஊழியர்­கள் மறு தேர்ச்­சி­யைப் பெறு­வ­தற்கு வழி­வ­குக்­கும். தங்­கள் நிறு­வ­னங்­களில் கரிம நிர்­வாகம் அல்­லது இதர புதிய சுற்றுச்சூழல் வேலை பார்க்­கும் ஊழி­யர்­க­ளுக்கு புதிய ஏற்­பு­டைய தேர்ச்­சி­கள் போதிக்­கப்­படும்.

துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் புதிய செயல்­திட்­டத்தை நேற்று அறி­வித்­தார். அந்த நிகழ்ச்சி­யில் சிங்­கப்­பூர் தூய்மை, பசுமை இயக்­கத்­தை அவர் தொடங்கி வைத்­தார்.

கரிம நிர்­வாகத் தேர்ச்­சி­களைக் கற்­றுக்­கொள்­வ­தன் மூலம் ஊழி­யர்­கள் கரி­மக் கழிவு புள்­ளி­விவரங்­க­ளைத் தயா­ரிப்­பது போன்ற தேர்ச்­சி­க­ளைப் பெறு­வார்­கள்.

கரி­மக் கழிவு கார­ண­மாக நிறு­வனங்­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய செலவு, பாதிப்பு பற்­றிய பகுப்­பாய்­வு­க­ளைச் செய்­யும் ஆற்­ற­லும் அவர்­க­ளுக்கு கற்­பிக்­கப்­படும்.

சுற்­றுச்­சூ­ழல் அதி­கா­ரி­கள், கரிமப் பகுப்­பாய்­வா­ளர்­கள் போன்ற புதிய வேலை­கள் உரு­வா­வ­தற்­கும் வாழ்க்­கைத் தொழில் மாற்றுச் செயல்­திட்­டம் ஆத­ரவு அளிக்­கும்.

கட்­ட­டங்­கள் சூழ்ந்த சுற்­றுப்­புறம், கட்­டு­மா­னம், எரி­சக்தி, மின்­சா­ரம், ஆலோ­சனை ஆகி­யவை இந்­தச் செயல்­திட்­டத்­தில் சம்­பந்­தப்­பட்டு இருக்­கும் சில துறை­கள் ஆகும்.

இந்­தத் திட்­டத்­தில் சேர்ந்து பயிற்சி பெறு­வோ­ரின் மாதாந்­திர சம்­ப­ளத்­தில் 70% வரை முத­லாளி­களுக்கு சிங்­கப்­பூர் ஊழி­யர் அணி அமைப்பு கொடுக்­கும். பயிற்சி பெறும் காலத்­தின்­போது மாதம் ஒரு­வ­ருக்கு $4,000 என்ற வரம்பு உண்டு.

முதி­ய­வர்­கள், வேலை­யில்­லா­த­வர்­கள் பயிற்சி பெறும் பட்­சத்­தில் அவர்­க­ளுக்கு அதிக நிதி­யு­தவி கிடைக்­கும்.

இந்­தச் செயல்­திட்­டத்­தில் சேர்ந்து புதிய தேர்ச்­சி­ பெற விண்­ணப்­பிப்­ப­வர்­கள் 21 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்ள சிங்­கப்­பூர் குடி­மக்­க­ளாக அல்­லது நிரந்­த­ர­வா­சி­க­ளாக இருக்க வேண்­டும். ஏற்­கெ­னவே வேலை பார்த்­த­வர்­க­ளா­க­வும் இருக்­க­வேண்­டும்.

இந்­தச் செயல்­திட்­டம் பற்­றிய மேல் விவ­ரங்­கள் சிங்­கப்­பூர் தொழில்­துறை கூட்­ட­மைப்­பின் இணை­யத்தளத்­தில் உள்­ளன.

இத­னி­டையே, சிங்­கப்­பூர் தூய்மை, பசுமை வாரத்­தைத் தொடங்கி வைத்த துணைப் பிர­தமர் ஹெங், சிங்­கப்­பூ­ரில் மறு­சுழற்­சியை மேம்­ப­டுத்த மேலும் பல­வற்றைச் செய்ய வேண்டி இருக்­கிறது என்று குறிப்­பிட்­டார்.

கடந்த 40 ஆண்­டு­களில் அன்றாட கழி­வு­கள் கிட்­டத்­தட்ட 7 மடங்கு அதி­க­ரித்து இருப்­பதை அவர் சுட்­டி­னார்.

இப்­போது குப்­பை­த்தொட்­டி­களில் சேக­ர­மா­கும் கழி­வு­களில் சுமார் 40 விழுக்­காட்டு பொருள்­களை மறு­சு­ழற்­சிக்கு ஈடு­ப­டுத்த முடி­வ­தில்லை. அவை கெட்­டுப்போய் விடு­கின்­றன. ஆகை­யால், சரி­யான முறை­யில் மறு­சு­ழற்­சியை ஊக்­கு­விக்க மேலும் பல முயற்­சி­களை நாம் செய்ய முடி­யும் என்­றார் அவர்.

இத­னி­டையே, தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் 27 பேருக்குச் சுற்­றுச்­சூழல் சேவை நட்­சத்­திர விருது வழங்­கிச் சிறப்­பித்­தது. இதர 472 பேருக்கு உன்­ன­தச் சான்­றி­த­ழை­யும் வழங்­கி­யது.

தூய்மை, பசுமை இயக்­கத்­திற்கு ஆத­ர­வாக துணைப் பிர­த­மர் பீஷான்-அங் மோ கியோ பூங்­கா­வில் மரக்­கன்று ஒன்றை நட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!