நட்புக்கு இலக்கணம், இளையர்களுக்கு முன்னுதாரணம்

நட்­புக்கு இலக்­க­ண­மாக விளங்­கும் இரு நண்­பர்­களை நாங்­கள் எங்­கள் நேர்­கா­ண­லுக்­காக தேர்­வு­செய்­தோம். ஷாஹிர், புவன் ஆகிய இரு­வ­ரும் குவீன்ஸ்­ட­வுன் உயர்­

நி­லைப் பள்­ளி­யின் முன்­னாள் மாண­வர்­கள்.

புவன் தற்­போது ஓர் இசை­ய­மைப்­பா­ள­ராக இருக்­கி­றார். ஷாஹிர் ஒரு தமி­ழா­சி­ரி­யர். இரு­வ­ரும் தொடக்­க­நிலை ஐந்­தி­லி­ருந்து நெருங்­கிய நண்­பர்­க­ளாக இருந்து வரு­கின்­ற­னர்.

பள்­ளிப் பரு­வத்­தி­லேயே புவன் இசைக்­கு­ழு­வில் சேர்ந்து பல இசை நிகழ்ச்­சி­களில் பங்­கேற்று வந்­துள்­ளார். அதோடு, அவர் பல இசைப் போட்­டி­களில் கலந்­து­கொண்டு பரி­சு­க­ளை­யும் வென்­றுள்­ளார்.

சிறு வய­தி­லேயே இசை­மேல் அதீத ஆர்­வம் கொண்­டி­ருந்த புவ­னி­டம், "நீ ஏன் ஏ.ஆர் ரஹ்­மா­னைப் போன்ற சிறந்த இசை­ய­மைப்­பா­ள­ராக ஆகக்­கூ­டாது?" என்று அவர் தந்தை ஒரு­முறை கேட்­டார். பிள்­ளை­யின் திற­மை­யின்­மீது அந்­தத் தந்தை கொண்ட நம்­பிக்­கை­யும் அவ­ரின் அய­ராத ஊக்­க­மும்­தான் இசை­ய­மைப்­பா­ள­ராக வேண்­டும் என்ற புவ­னின் ஆசைக்கு விதை­யா­னது.

அன்­றி­லி­ருந்து புவன் தன் கனவை நன­வாக்க கடு­மை­யாக உழைக்­கத் தொடங்­கி­னார். அவ­ருக்கு ஆத­ரவு அளித்­த­வர்­களில் அவ­ரின் ஆசி­ரி­யர்­களும் அடங்­கி­னர். புவ­னின் திற­மையை உணர்ந்து, வாய்ப்­பு­கள் வந்­த­போ­தெல்­லாம் அவற்­றைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள ஊக்­கு­வித்து ஆத­ர­வ­ளித்­த­னர் என்று நன்­றி­யு­டன் தன் ஆசி­ரி­யர்­களை நினை­வு­கூர்ந்­தார் புவன்.

புவன் இசைத்­து­றை­யில் நாட்­டம் செலுத்­திய வேளை­யில், ஷாஹிர் ஓர் ஆசி­ரி­ய­ராக வேண்­டும் என விரும்­பி­னார். உயர்­நி­லைப் பள்ளி ஆசி­ரி­யர்­கள் அளித்த ஊக்­கு­விப்பு, எரி­கிற விளக்­குக்­குத் தூண்­டு­கோ­லாக விளங்­கி­யது. தன்­னைக் கவர்ந்த ஓர் ஆசி­ரி­ய­ரின் தனித்­து­வ­மிக்க கற்­பிக்­கும் பாணி, மாண­வர்­க­ளு­டன் மிகுந்த அன்­பு­டன் ஒரு நண்­ப­ரைப் போல் அந்த ஆசி­ரி­யர் கல­க­லப்­பா­கப் பழ­கும் குணம் ஆகி­யவை ஷாஹி­ரின் மன­தில் ஓர் ஆசி­ரி­ய­ராக வேண்­டும் என்ற எண்­ணத்தை விதைத்­தது.

தமிழ் மொழியை இன்­னும் சிறப்­பா­கக் கற்­றுத் தேர்­வ­தற்­கும் மொழி வளத்­தைப் பெருக்­கிக்­கொள்­வ­தற்­கும் ஷாஹி­ரின் உயர்­நி­லைப்­பள்ளி அனு­ப­வங்­கள் பெரி­தும் உத­வின. ஓர் ஆசி­ரி­ய­ருக்­குத் தேவை­யான குணங்­கள் இயல்­பா­கவே அவ­ருக்­குள் இருப்­பதை அவ­ரு­டைய நண்­பர்­களும் ஆசி­ரி­யர்­களும் கவ­னிக்­கத் தவ­ற­வில்லை; அவ­ருக்கு அதை உணர்த்­த­வும் தயங்­க­வில்லை. லட்­சி­யத்தை அடை­யும் நோக்­கு­டன் ஷாஹிர் சிரத்தை எடுத்­துப் படித்­தார்.

தாங்­கள் செய்­யும் வேலை­யில் உச்­சத்­தைத் தொட வேண்­டும் என்­ப­தற்­காக அவர்­கள் இரு­வ­ருமே முனைப்­பு­டன் செயல்­பட்டு வரு­கின்­ற­னர். இசை­ய­மைப்­பா­ளர் ஆவ­தன் சவால்­கள் குறித்து நாங்­கள் கேட்­ட­போது புவன், "நமக்­குப் பிடித்த துறை­யில் ஈடு­ப­டும்­போது கட்­டா­ய­மா­கத் தடை­கள் இருக்­கும். அவற்­றி­லி­ருந்து மீண்­டு­வ­ரும்­போது நமக்­குள் உள்­ளூர ஒரு­வ­கை­யான பெரு­மி­த­மும் மன­நி­றை­வும் உண்­டா­கும்," என்­றார்.

"நான் இசை­மேல் அள­வற்ற பற்­றும் ஆர்­வ­மும் கொண்­டுள்­ளேன். அனைத்து சோத­னை­க­ளை­யும் சாத­னை­க­ளாக மாற்ற அந்­தப் பற்­றும் ஆர்­வ­மும்­தான் துணை­பு­ரிந்­தன," என்­றார் புவன்.

சிறு­வ­யது முதலே இளை­ய­ராஜா, ஏ.ஆர் ரஹ்­மா­னின் இசை­யால் கவ­ரப்­பட்ட புவன், வசந்­தம் தொலைக்­காட்­சி­யில் ஒளி­ப­ரப்­பப்­பட்ட பல கச்­சே­ரி­க­ளி­லும் அரங்­கேற்­றங்­க­ளி­லும் பங்­கு­பெற்­றுள்­ளார். புவ­னின் இசை­யில் வெளி­வந்த ரூபாய் என்ற தலைப்­பி­லான கவி­தை­யும் 'அச்­ச­மில்லை' என்ற நாட­கத்­தொ­ட­ருக்கு அவர் அமைத்த இசை­யும் அவ­ரது இசைப் பய­ணத்­தில் முத்­திரை பதித்­தவை.

வேலை­களை எவ்­வாறு ஒரு­சேர திறம்­ப­டச் சமா­ளிக்­கி­றீர்­கள் என்று இரு­வ­ரி­ட­மும் கேட்­ட­போது ஷாஹிர், "அழையா விருந்­தா­ளி­போல் சவால்­கள் ஏற்­பட்­டுக்­கொண்­டே­தான் இருக்­கும். அவற்றை நாம்­தான் சாமர்த்­தி­ய­மா­கச் சமா­ளிக்க கற்­றுக்­கொள்­ள­வேண்­டும். என்­னு­டைய ஆசி­ரி­யர் பணி­யின் ஆரம்­ப­கட்­டத்­தில் கற்­றல் கற்­பித்­த­லுக்­குத் துணை­பு­ரி­யக்­கூ­டிய செய­லி­கள் சில­வற்­றைப் பயன்­ப­டுத்­தத் தடு­மா­றிய தரு­ணங்­கள் பல. ஆனால், அத்­த­ரு­ணங்­களில் சவால்­களை எதிர்­கொள்­வ­தற்­கான வழி­களை ஆராய்­வ­தில் நான் கவ­னம் செலுத்­தி­னேன். சிக்­கல்­கள் நேரும்­போது அவற்றை எதிர்­கொண்டு தீர்­வு­கா­ணும் திறனை நாம் வளர்த்­துக்­கொள்ள வேண்­டும்," என்­றார்.

இசைத்­துறை வேண்­டாம் என்று தன் லட்­சி­யக் கன­வுக்­குப் பல­ரும் முட்­டுக்­கட்­டை­யாக இருந்­ததை நினை­வு­கூர்ந்த புவன், தனக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளின் ஊக்­கு­விப்பு உற்­சா­கம் அளித்­த­தா­கக் குறிப்­பிட்­டார்.

எதில் ஈடு­பாடு உள்­ளதோ அதில் உச்­சத்தை அடை­யும்­வரை போராட வேண்­டும் என்­றும் புவன் பகிர்ந்­து­கொண்­டார். செயல்­க­ளி­லும் எண்­ணத்­தி­லும் நேர்­மை­யாக இருக்க வேண்­டு­மென ஷாஹிர் அறி­வு­றுத்­தி­னார்.

பேட்டி கண்ட மாண­வர்­கள்:

ஹரிணி பால­சுப்­ர­ம­ணி­யம்

சம்­யுக்தா

நூர் இன்­ஷீரா

புவ­னேஸ்­வரி ரமேஷ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!