எதிர்­கா­லச் சிந்­தனை முக்­கி­யம்

எதிர்­கா­லச் சிந்­தனை முக்­கி­யம்

2 mins read
fd04b939-8cbc-4319-bdbc-e4c4e469129a
-

நாட்­டின் எதிர்­காலம் சிறப்­பா­ன­தாக அமை­ய­வேண்­டும் என்ற எண்­ணம் கொண்­ட­வர் செல்வி மா.பிரெ­மிக்கா. தொண்­டூ­ழி­யம் புரி­வ­தி­லும் மருத்­து­வத் துறை­யில் சேவை­யாற்­று­வ­திலும் நாட்­டம் கொண்­ட­வ­ராக இருப்­ப­து­டன் தமிழ்­மொ­ழி­யின் மீது பற்­று­டை­ய­வ­ரா­க­வும் திகழ்­கி­றார்.

ராஃபிள்ஸ் பெண்­கள் பள்­ளி­யில் தான் படித்த நாள்­களை நினை­வு­கூ­ரும்­போது தனக்­கா­க­வும் மற்­ற­வர்­க­ளுக்­கா­க­வும் தன்­னம்­பிக்­கை­யு­டன் துணிந்து பேசு­வ­தைப் பள்ளி காலத்­தில்­தான் கற்­றுக்­கொண்­ட­தாக எங்­க­ளி­டம் கூறி­னார்.

சமூக சேவை புரிந்த அனு­

ப­வங்­கள் மூலம் மக்­க­ளின் உடல்­ந­லப் பிரச்­சி­னை­க­ளுக்­குக் கார­ணம் ஆரோக்­கி­யம் தொடர்­பான அவர்­க­ளின் அறி­யா­மையே என்று உணர்ந்­தார். இந்­நி­லையை மாற்ற எண்­ணி­ய­தா­லும் மனித உட­லி­லும் நோய்­க­ளி­லும் அவர் கொண்­டி­ருந்த ஆர்­வத்­தா­லும் மருத்­து­வத் துறை­யில் பயில முடிவு செய்­தார். தொடக்­கக் கல்­லூ­ரி­யில் மருந்­தக வேதி­யி­யல் பாடம் படித்­த­து­டன் 'ஏஸ்­டார்' நிறு­வ­னத்­தில் ஆய்வு மேற்­கொள்­ளும் வாய்ப்­பு­க­ளை­யும் பெற்­றார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இவர் பயின்­ற­போது, அவர் மருத்­து­வத்­தில் தேர்ச்சி அடைய படிப்பு மட்­டும் போதாது என்று உணர்ந்­தார். புரிந்­து­ணர்­வு­டன் தன் உணர்ச்­சி­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­திக்­கொண்­டும் நிதா­ன­மா­கச் சிந்­தித்து வலி­யில் இருக்­கும் நோயா­ளிக்கு உதவு

வதும் முக்­கி­யத் திறன்­கள் என்­கி­றார் செல்வி பிரெ­மிக்கா.

இந்­தி­யா­வின் வேலூ­ரில் உள்ள கிறிஸ்­டி­யன் மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் ஒரு மாத­கால பயிற்­சி­யின்­போது இதை அவர் உணர்ந்­தார்.

"சிங்­கப்­பூர் சுகா­தா­ரம் மிக­வும் மேம்­பட்­டது. நோயை ஆரம்ப கட்­டத்­தில் கண்­ட­றிந்­து­வி­டு­கி­றோம். குறைந்த பரி­சோ­த­னை­கள் மூலம் பிரச்­சி­னை­யைக் கண்­ட­றி­யும் தன்மை முக்­கி­யம்," என்­றார்.

செல்வி பிரெ­மிக்கா தமிழ்­மொழி மீது அதிக ஆர்­வ­மும் மதிப்­பும் கொண்­ட­வர். பல இனத்­த­வர் வாழும் சிங்­கப்­பூ­ரில் தனது அடை­யா­ளத்தை தமிழ்­மொழி வலுப்­ப­டுத்­தி­ய­தாக இவர் நம்­பு­கி­றார். இவர் ராஃபிள்ஸ் பெண்­கள் பள்­ளி­யின் இந்­தி­யர் சங்­கத்­தின் தலை­வ­ரா­க­வும் ராஃபிள்ஸ் கல்வி நிலைய (தொடக்­கக் கல்­லூரி) இந்­தி­யர் சங்­கத்­தின் துணைத் தலை­வ­ரா­க­வும் சேவை­யாற்­றி­ய­தோடு, சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தமிழ்­மொ­ழிச் சங்­கத்­தின் 37வது செயற்­கு­ழு­வின் துணைத் தலை­வ­ரா­க­வும் இருந்­தார். மொழி­யைப் பாது­காத்து, வரும் தலை­மு­றை­க­ளுக்கு அதைக் கொண்டு சேர்த்து, அது மற்­ற­வர்­க­ளால் தொடர்ந்து பேசப்

படு­வ­தன் அவ­சி­யத்தை இவர் பகிர்ந்­து­கொண்­டார்.

"சிங்­கப்­பூ­ரின் உல­க­ளா­விய அடை­யா­ளத்­திற்கு மொழி­யும் கலா­சா­ர­மும் முக்­கி­யம். அதுவே நமது தனித்­து­வம்," என்­கி­றார் இவர். பள்ளி சார்ந்த ஒரு பாட­மாக மட்­டும் தமிழ்­மொ­ழி­யைக் கரு­தா­மல், அதை அவ­ர­வர் தங்­க­ளின் துறை

களுக்­கும் வேலை­க­ளுக்­கும் கொண்டு சென்று, தமிழ்­

மொ­ழிக்கு நம் வாழ்­வில் பங்­குண்டு என்­ப­தைக் காட்ட வேண்­டும் என்­பதே இவர் சிங்­கப்­பூர் இளை­யர்­க­ளுக்கு அறி­வு­றுத்த விரும்­பு­வ­தா­கும்.