மாண்ட பாட்டியைப் பார்க்க கூகள் வரைபடத்தை நாடும் பேரன் 

காலஞ்சென்ற தமது பாட்டியின் நினைவுகள் தோன்றும்போதெல்லாம் கூகள் வரைபடத்தைத் தட்டுகிறார் சிங்கப்பூரர் ஒருவர். 

சாலை ஒன்றை முதியவர் ஒருவர் கடக்கும் காட்சி கூகள் வரைபடத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்தக் காட்சியை தனது டிக்டாக் தளத்தில் பதிவேற்றம் செய்த நபர் சாலையைக் கடப்பது தமது காலஞ்சென்ற பாட்டி என்று தெரிவித்துள்ளார்.

ஹவ்காங் பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு எதிரே உள்ள ஹவ்காங் சென்ட்ரல் சாலையை முதியவர் ஒருவர் குடை, சில பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை தூக்கிக்கொண்டு கடப்பது கூகள் வரைபடத்தில் தெரிகிறது. இந்தக் காட்சி 2022ல் பதிவுசெய்யப்பட்டது.  

“சீனப் புத்தாண்டின்போது  என் பாட்டி இல்லை என்பது எனக்கு கவலையளிக்கும். என் பாட்டியின் நினைவு வரும்போதெல்லாம் நான் இந்த கூகள் வரைபடத்தை பார்ப்பேன்,” என்கிறார் அந்த நபர். அந்த நபரின் பாட்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாண்டதாக அவர் கூறினார். 

 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!