சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு டாலருக்கு எதிராக அதிகரிப்பு

சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு எதிராக ஐந்தாண்டு காலத்தில் இல்லாத அ ளவுக்கு  உச்சத்தைத் தொட்டது. 

அமெரிக்காவின் மத்திய வங்கி, இப்போது பணவீக்கம் குறையத் தொடங்கி  இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு கூடியுள்ளது. 

அமெரிக்க மத்திய வங்கி இப்படி அறிவித்துள்ளதை வைத்துப் பார்க்கையில் அமெரிக்க டாலரின் தொடர் மதிப்பேற்றம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.

சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு, டாலருக்கு எதிராக 0.2% அதிகரித்து 1.3038 ஆக இருந்தது. இந்த அளவு, 2018 ஜனவரி மாதத்திற்குப் பிறகு ஆக அதிகமானதாகும்.

சிங்கப்பூர் வெள்ளி கடந்த செவ்வாய் முதல் சுமார் 0.7% கூடி இருக்கிறது.

இந்த ஆண்டில் சிங்கப்பூர் நாணயம் மதிப்பு கூடிவருகிறது. சென்ற ஆண்டு முடிவில் இருந்து கணக்கிட்டுப் பார்க்கையில் அமெரிக்க டாலருக்கு எதிராக சிங்கப்பூர் வெள்ளி சுமார் 2.7% வலுவடைந்து இருக்கிறது.

 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!