ரத்த தானத்தில் தீவிரம் காட்டும் இளையர்கள்

ரத்த தானம் செய்பவர்களின், குறிப்­பாக இளை­ஞர்­க­ளின் எண்­ணிக்­கை பத்து விழுக்­காடு குறைந்­துள்­ள­தாக சிங்­கப்­பூர் செஞ்­சி­லுவைச் சங்­கம் அண்­மை­யில் தெரிவித்தது.

ரத்த வங்கியில் போதுமான அளவுக்கு ரத்தம் இருப்பதை உறுதி செய்வது சவால்மிக்க தாகிவிட்டதாகத் தெரிவிக்கப் பட்டது.

ரத்த தானம் செய்பவர்களில், ஒன்­றரை விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டும் Rh- ரத்த வகை உள்­ளது. இந்­தி­யர்­க­ளி­டம் Rh- ரத்த வகை அதி­கம் கண்­ட­றி­யப்­ப­டு­கிறது. Rh- ரத்த வகை இருப்­ப­வர்­க­ளுக்கு ரத்­தம் தேவைப்­படும் போது அதே வகை ரத்தம் கிடைத்­தால் நல்­லது. அவ­சர மருத்­துவ சூழ்­நி­லை­களில், 12 நாள்க­ளுக்­கான Rh- ரத்த இருப்பு­கள் இருப்­பது சிறந்­தது.

பண்­டி­கைக் காலங்­க­ளி­லும் விடு­மு­றைக் காலங்­க­ளி­லும் ரத்த இருப்­பு­கள் குறை­வ­தற்கான சாத்தியம் அதி­க­மாக இருப்­ப­தால், பொது­மக்­கள் குறைந்­த­பட்­சம் ஆண்­டுக்கு இரண்டு முறை ரத்த தானம் செய்ய ஊக்கு விக்கப்படுகின்றனர்.

இதனை ஒட்டி, ரத்த தானம் செய்துவரும் சில இளையர்களை தமிழ் முரசு சந்தித்தது.

 

ரத்த தானம் செய்வதில் முனைப்பு காட்டும் சகோதரிகள்

டோபி காட்­டி­லும் சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தி­லும் செயல்­படும் ரத்த வங்­கி­களில் ரத்த தானம் செய்ய மக்­களை ஊக்­கு­விக்க வேண்­டு­மென்ற முனைப்­பில், ‘பிரஷியஸ் டிராப்ஸ்’ எனும் ஓர் இயக்­கத்தை சகோதரிகள் மூவர் அறி­மு­கப்­

ப­டுத்­தி­யுள்­ள­னர்.

தங்­களுக்கு ஒத்த வய­தில் இருப்­ப­வர்­களை ரத்த தானம் செய்ய ஊக்கு ­விப்­பது சில நேரங்­களில் கடி­ன­மாக இருப்­ப­தாக 22 வயது நிலா ரவிந்­தி­ரன், 19 வயது நித்­திலா ரவிந்­தி­ரன், 18 வயது நித்­தியா ரவிந்­தி­ரன் ஆகிய மூவ­ரும் தெரி­வித்­த­னர்.

இருப்­பி­னும், தங்­கள் பங்­கிற்கு முடிந்த வரை ரத்த தானம் செய்ய மூவ­ரும் முனைப்­பு­டன் உள்­ள­னர்.

மூத்­த­வ­ரான நிலா, தனது 17 வய­தில் ரத்த தானம் செய்­யத் தொடங்­கி­னார். பிறகு தமது இரு தங்­கை­க­ளை­யும் அதே ­பா­தை­யில் கொண்டு சென்­றார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இரண்­டாம் ஆண்டு மருத்­து­வம் பயி­லும் நிலா, ஐந்து ஆண்­டு­களில் மூன்று முறை

மட்­டுமே ரத்த தானம் செய்­தி­ருந்­தா­லும் மேலும் பல­முறை ரத்த தானம் செய்ய வேண்­டும் என்ற லட்­சி­யத்­தைக் கொண்­டுள்­ளார். முதல் ரத்த தான அனு­ப­வத்தை நினை­வு­கூர்ந்த நிலா­வும் நித்­தி­லா­வும் தொடக்­கத்­தில் சற்று களைப்­பாக இருந்­த­போ­தி­லும் ரத்­தம் தேவைப்­படும் நோயா­ளிக்கு அது செலுத்­தப்­படும் என்று எண்­ணம் மகிழ்ச்­சி­யைத் தந்­த­தா­கத் தெரி­வித்­த­னர்.

30 வயது அடை­வ­தற்­குள் 30 முறை ரத்த தானம் செய்­து­விட வேண்­டும் என்ற இலக்கு கொண்­டுள்ள இவர்­கள், “வார­யி­றுதி நாள்­க­ளி­லும் மக்­கள் தங்­கள் நேரத்தை ஒதுக்கி எங்­கள் இயக்­கத்­தின் மூலம் ரத்த தானம் செய்ய முன் வரு­வது மகிழ்ச்­சி­யைத் தரு­கிறது. பிறர் உயிர் வாழ்­வ­தற்­குக் கார­ண­மாக இருப்­பதை நினைத்­தால் மனம் நெகிழ்­கிறது,” என்று சகோ­த­ரி­கள்

மூவ­ரும் கூறி­னர்.

 

எதேச்­சை­யாக ஏற்­பட்ட ரத்த தானப் பழக்­கம்

நிதி ஆலோ­ச­க­ராக இருக்­கும் 28 வயது அஷ்­வின் ராமன், ரத்த தானம் செய்­வது தமக்கு மன­

நி­றை­வைத் தரு­கிறது என்று கூறு­கி­றார். இவர் கடந்த ஏழு ஆண்­டு­க­ளாக கிட்­டத்­தட்ட 15 முறை ரத்த தானம் செய்­துள்­ளார். எதேச்­சை­யாக இதில் ஈடு­பட தொடங்­கி­ய­தா­கப் தமிழ் முர­சி­டம் பகிர்ந்­து­கொண்­டார்.

தமது தந்தை ஏறத்­தாழ 30 ஆண்­டு­க­ளுக்கு மேலாக ரத்த தானம் செய்து வந்தபோதிலும், பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயின்று கொண்­டி­ருந்­த­போது, ரத்த வங்கி சாவ­டியை கண்ட பின்­னரே ரத்த தானம் செய்ய அஷ்­வின் முடி­

வெ­டுத்­தார். வேலை கார­ண­மாக தொண்­டூ­ழி­ய­த்­தில் ஈடு­பட நேரம் கிடைப்பதில்லை என்பதால் அஷ்­வின் ரத்த தானம் அளிப்­பதை தொண்­டூ­ழி­ய­மா­கக் கரு­து­கி­றார், தமது நண்­பர்­க­ளுக்கு நல்ல முன்­மா­தி­ரி­யா­கத் திகழ இவர் விரும்பு ­கி­றார்.

ரத்த தானம் செய்­தா­லும் ஒரு­வர் தனது ஆரோக்­கி­யத்­தைப்­பேணிக்­காக்க முடி­யும் என்று உறு­தி­யாக கூறும் அஷ்­வின், போது­மான உறக்­கம், உடற்­

ப­யிற்சி செய்­வது, போது­மான தண்­ணீர் பரு­கு­வது, இரும்­புச் சத்து நிறைந்த உண­வு­வ­கை­களை உட்­கொள்­வது ஆகி­ய­வற்­றைக் கடைப்­பி­டித்து வரு­கி­றார்.

தன் தங்­கை­யும் ரத்த தானம் செய்­வ­தில் நாட்­டம் காட்­டு­வ­

தா­கக் கூறும் அஷ்­வின், பெரி­ய­வர்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், இளை­யர்­கள் ரத்த தானம் அளிக்க அதிக அளவில் முன் வரு­வ­தில்லை என்று வருத்­தம் தெரி­வித்­தார். தம்மால் முடிந்­த­வரை வாழ்க்கை முழு­வ­தும் ரத்த தானம் செய்ய விழைகிறார் அஷ்வின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!