ரமலான் மாத நோன்பை ஒட்டி 30,000 கிலோ அரிசி நன்கொடை

புனித ரம­லான் மாத நோன்பை ஒட்டி குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் குடும்­பங்­க­ளுக்கு உத­வும் நோக்­கில் 30,000 கிலோ­கி­ராம் அரி­சியை சிங்­கப்­பூர் பௌத்த மடா­ல­யம் (புத்­திஸ்ட் லாட்ஜ்) ப’அல்வி பள்­ளி­வாச­லுக்கு நன்­கொ­டை­யாக வழங்­கி­யுள்­ளது.

லூவிஸ் சாலை­யில் அமைந்­துள்ள ப’அல்வி பள்­ளி­வாச­லில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இந்த­ நி­கழ்வு நடை­பெற்­றது.

அதில் சிங்­கப்­பூர் பௌத்த மடால­யத்­தின் தலை­வர் டான் லீ ஹுவாக், ப’அல்வி பள்­ளி­வாச லின் இமாம் சையது ஹசான் அல்-அத்­தாஸி­டம் நன்­கொ­டையை வழங்கி­னார்.

நன்­கொ­டை­யாக பெறப்­பட்ட அரிசி சிங்­கப்­பூர் முழு­வ­து­முள்ள வசதி குறைந்­தோ­ருக்கு வழங்­கப்­படும். சமூக அமைப்­பு­கள், அடித்­தள அமைப்­பு­கள், பள்ளி வாசல்­கள் ஆகி­ய­வற்­றின் மூலம்­நன்­கொடை விநி­யோ­கிக்­கப்­படும்.

மேலும் பள்­ளி­வா­சல்­களில் ரம­லான் மாதத்­தில் தினந்தோ­றும் சமை­க்­கப்­படும் நோன்­புக்­ கஞ்­சிக்­கா­க­வும் நன்­கொ­டை­யாக வழங்­கப்­படும் அரி­சி­யில் ஒரு பகுதி பயன்­படுத்­தப்­படும்.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஒவ்­வோர் ஆண்டு புனித ரம­லான் மாதத்­தின்­போது சிங்­கப்­பூர் பௌத்த மடா­ல­யம் அரி­சியை நன்­கொ­டை­யாக வழங்கி வரு­கிறது.

இது­வரை மொத்­தம் ஏறத்­தாழ 360,000 கிலோ­விற்­கும் மேலான அரிசி நன்­கொ­டை­யாக வழங்­கப்­பட்­டுள்­ள­தாக நன்­கொடை விநி­யோ­கத் திட்­டத்­தின் ஏற்­பாட்­டா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

­“வசதி குறைந்­த­வர்­களும் எவ்­வி­தப் பாகு­பா­டு­மின்றி விழாக் காலத்தை மகிழ்­வு­டன் கொண்­டாட உத­வும் நோக்­கி­லேயே இத்­திட்­டம் ஒவ்­வோர் ஆண்­டும் செயல்­பட்டு வரு­கிறது,” என்று கூறி­னார் ப’அல்வி பள்­ளி­வாச ­லின் இமாம் சையது ஹசான் அல்-அத்­தாஸ்.

மேலும் கூடு­த­லாக 40,000 கிலோ பேரீச்­சம்­ப­ழ­மும் நன்­கொடை­யாக வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் கடந்த 1993ஆம் ஆண்டு முதல் சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து இந்­நன்­கொடை வழங்­கப்­பட்­டு­ வ­ரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

“சிங்­கப்­பூ­ரின் சமய நல்­லி­ணக்­கத்தை வலி­யு­றுத்­தும் வகை­யில் இன, சமயப் பாகு­பா­டின்றி வச­தி­கு­றைந்த பொது­மக்­க­ளுக்கு இந்­நன்­கொடை சென்று சேர ஏறத்­தாழ முப்­ப­துக்­கும் மேற்­பட்ட தொண்­டூ­ழி­யர்­கள் ஒன்­றி­ணைந்து இந்­த நன்­கொடை விநி­யோக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ கிறோம்,” என்று நன்­கொடை விநி­யோகத் திட்­டத்­தின் தலை வ­ரும் முன்­னாள் நிய­மன நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முஹம்­மது இர்­ஷாத் கூறி­னார்.

மேலும் இந்­நி­கழ்­வில் பாசிர் ரிஸ் தொகு­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஷரெல் தாஹா­வும் கலந்­து­கொண்­டார்.

­நன்­கொ­டை­யாக அரி­சி­யும் பேரீச்­சம்­ப­ழ­மும் பெற விரும்­பும் வச­தி­கு­றைந்த பொது­மக்­களும் நன்­கொடை அளிக்க விரும்­பும் இதர அமைப்­பு­களும் இத்­திட்­டத்­தின் தொண்­டூழி­யர் ஹாஜா மைதீனை 97862574 எனும் எண் ­ணில் தொடர்­பு­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!