முன்னாள் கைதிகளுக்குப் புதிய பாடத் திட்டம்

முன்னாள் கைதிகளுக்குப் புதிய பாடத் திட்டம்

1 mins read
926ac62e-d8f2-4378-a429-cc1209b29417
-

முன்னாள் சிறைக் கைதிகளுக்கு இணைய, மின்னிலக்கத் திறன்களை வளர்க்கும் நோக்குடன் புதிய பாடத் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. 'அக்ரோனிஸ்-ஹெச்சிஎஸ்ஏ கம்பியூட்டர் கிளாஸ்ரூம்' எனப்படும் பாடத் திட்டம் நேற்று தொடங்கியது.

இது, 'ஹெச்எஸ்ஏ ஹைபாய்ன்ட்' மறுவாழ்வு இல்லம், மஞ்சள் நாடா நிதி, சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு நிறுவனமான அக்ரோனிஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சி. திறமையான முன்னாள் கைதிகள் சிலருக்கு மின்னிலக்க அம்சங்களில் பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம்; அதனால் ஆற்றலை வெளிப்படுத்த அவர்கள் சிரமப்படக்கூடும். அத்தகையோருக்குக் கைகொடுப்பது இந்தப் பாடத் திட்டத்தின் இலக்கு.

'ஹெச்சிஎஸ்ஏ ஹைபாய்ன்ட்' மறுவாழ்வு இல்லத்தில் பாடத் திட்டத்துக்கான வகுப்புகள் நடத்தப் படுகின்றன. 'ஹெச்சிஎஸ்ஏ ஹைபாய்ன்ட்' மறுவாழ்வு இல்லம், கேலாங்கில் இருக்கும் தங்க இடம் இல்லாத முன்னாள் கைதிகளுக்கான குடியிருப்புப் பகுதி.