விபத்தில் மாண்டவர் விதிகளை மீறிய மற்றவர்களோடு சாலையைக் கடந்தார்: மரண விசாரணை அதிகாரி

விபத்தில் மாண்டவர் விதிகளை மீறிய மற்றவர்களோடு சாலையைக் கடந்தார்: மரண விசாரணை அதிகாரி

1 mins read
b5c3f0f9-df40-4ad2-b77d-90986d68f544
-

சென்ற ஆண்டு செப்­டம்­பர் 17ஆம் தேதி, கைத்­தொ­லை­பே­சி­யைப் பார்த்­த­வாறே சாலை­யைக் கடக்க முயன்ற 52 வயது முக­மது யுஸ்­மான் சகா­தன் கார் மோதி உயி­ரி­ழந்­தார்.

சம்­ப­வத்­தன்று அல்­ஜு­னிட் சாலை­யில் போக்­கு­வ­ரத்­துச் சமிக்­ஞை­யில் 'சிவப்பு' எச்­ச­ரிக்கை விளக்கு ஒளிர்ந்­த­போது அவர் சாலை­யைக் கடந்­தார்.

கைத்­தொ­லை­பே­சி­யில் கவ­ன­மாக இருந்த யுஸ்­மான், அரு­கில் நின்­றி­ருந்த இரு­வர் சாலை­யைக் கடக்க முயன்­ற­தால் அவர்­க­ளோடு சேர்ந்து தானும் சாலை­யைக் கடக்க முடி­வெ­டுத்­தி­ருக்­கக்­கூ­டும் என்று மரண விசா­ரணை அதி­காரி கூறி­னார்.

சாலை­யைக் கடக்­கும்­போது அவர் கைத்­தொ­லை­பே­சி­யி­ல் இருந்து கண்­களை அகற்­ற­வில்லை. நிமிர்ந்து பார்க்­கா­மலே அவர் சாலை­யைக் கடந்­தது அந்த வட்­டா­ரத்­தில் உள்ள கண்­கா­ணிப்­புக் கேம­ராப் பதி­வின் மூலம் தெரி­ய­வந்­தது.

போக்­கு­வ­ரத்­துச் சமிக்­ஞை­களில் காத்­தி­ருக்­கும் நேரத்­தில் கைத்­தொ­லை­பே­சி­யைப் பார்த்­த­வாறே சாலை­யைக் கடக்­கும் போக்கு பொது­வா­கக் காணப்­படு­வ­தைச் சுட்­டிய மரண விசா­ரணை அதி­காரி ஆடம் நக்­கோடா, இது ஆபத்­தா­னது என்று வலி­யு­றுத்­தப்­பட வேண்­டும் என்­றார்.

சாலை­யைக் கடக்­கும் பாத­சா­ரி­கள் கைத்­தொ­லை­பே­சி­யில் இருந்து கவ­னத்­தைத் திருப்பி சாலை­யில் எதிர்­வ­ரும் வாக­னப் போக்­கு­வ­ரத்து நிறுத்­தப்­பட்­டுள்­ளதை உறு­தி­செய்த பிறகே சாலை­யைக் கடக்க வேண்­டும் என்று குறிப்­பிட்­டார்.