குதிரைப் பந்தயத் திடலில் மறுமேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக வீடுகள் கட்டப்படுமானால் உட்லண்ட்ஸ் வட்டார மைய உருவாக்கத்திற்கு கிராஞ்சி கைகொடுக்கும் என்று சொத்துச் சந்தைப் பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வீடுகள், ஓய்வுக்கூடங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுக்காக இந்த இடம் மீட்கப்படுவதாக அரசாங்கம் திங்கட்கிழமை தெரிவித்திருந்தது.
அதுகுறித்து கருத்துத் தெரிவித்த 'ப்ராப்நெக்ஸ் ரியால்டி' நிறுவனத்தின் தலைமை நிர்வாகி இஸ்மாயில் கஃபூர், 120 ஹெக்டர் நிலப்பரப்பில் ஏராளமான வர்த்தக மேம்பாடுகளுடன் அதிக ஊழியர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பும் இருப்பதாகச் சொன்னார்.

