காவல்துறை அதிகாரியை தாக்கிய 20 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். தியோங் பாரு சாலையில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 2.35 மணியளவில் மூன்று ஆடவர்களிடம் சோதனை நடத்தினர். அவர்களில் ஒருவர் ஒத்துழைக்காமல் மிரட்டும் வகை யில் நடந்துகொண்டார். அவர் அதிகாரி ஒருவரின் முகத்தில் குத்தியதாகக் கூறப் படுகிறது, இதனால் அவரது இடது கன்னத்தில் வெட்டு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அந்த ஆடவர்மீது இன்று குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கள் கடமைகளைச் செய்யும் காவல்துறை அதிகாரிகள் அல்லது அரசு ஊழியர்களுக்கு எதிரான வன்முறை ஏற்றுக்கொள்ளப் படாது என்று காவல்துறை கூறியது.
அதிகாரியைத் தாக்கியவர் கைது
1 mins read
-

