சேவை, பராமரிப்புக் கட்டணத்தை உயர்த்துகிறது செங்காங் நகரமன்றம்

செங்காங் நகர மன்றம் 2025 மார்ச் 1ஆம் தேதி முதல் சேவை, பராமரிப்புக் கட்டணங்களை உயர்த்த இருக்கிறது.

சிங்கப்பூரில் உள்ள எல்லா 17 நகர மன்றங்களும் இந்தக் கட்டணங்களை உயர்த்திய பின்னர் அந்த வரிசையில் ஆகக் கடைசியாக செங்காங் நகர மன்றம் வந்து உள்ளது. இது பாட்டாளிக் கட்சியால் நிர்வகிக்கப்படுகிறது.

ஈராண்டுக்கும் குறைவான பெரும்பாலான வீவக வீடுகளுக்கான மாதாந்திர சேவை, பராமரிப்புக் கட்டணங்களை $1 முதல் $14.50 வரை உயர்த்த இருப்பதாக செங்காங் நகர மன்றம் திங்கட்கிழமை தெரிவித்தது.

மற்ற சொத்துகளின் உரிமையாளர்களும் வாடகைதாரர்களும் சதுர மீட்டருக்கு 2.19 காசுகள் முதல் 30 காசுகள் வரை என்ற விகிதத்தில் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம் என்றும் கடைகள் மற்றும் இதர வர்த்தகச் சொத்துகளுக்கான கட்டணம் $10.50 உயர்த்தப்படும் என்றும் அது குறிப்பிட்டது.

பாட்டாளிக் கட்சி நிர்வகிக்கும் மற்றொரு நகரமன்றமான அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் உள்ளிட்ட மற்ற எல்லா நகர மன்றங்களும் சேவை, பராமரிப்புக் கட்டணங்களை இரு கட்டங்களாக உயர்த்துகின்றன.

முதற்கட்ட கட்டண உயர்வு இவ்வாண்டின் தொடக்கத்தில் அறிமுகம் கண்டிருக்கும் வேளையில், அடுத்தகட்ட உயர்வு 2024ஆம் ஆண்டு நடப்புக்கு வரும் என்று அவை அறிவித்து இருந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!