கட்டண முறைகளை சீராக்க நெட்ஸ் நடவடிக்கை

ஒரு முறையைக் கொண்டு தங்களின் அனைத்து கடைகளின் எல்லா செயல்பாடுகளையும் நிர்வகிக்க நினைக்கும் நிறுவனங்களுக்கு வழி பிறந்துள்ளது.

அத்தகைய நிறுவனங்களுக்கு உதவும் முறையை நெட்ஸ் நிறுவனம் வியாழக்கிழமையன்று வெளியிட்டது. வர்த்தகங்கள் தங்களின் பொருள்கள், பரிவர்த்தனைகள் ஆகியவற்றைக் கவனிப்பது, தாங்கள் பெறவேண்டிய வருவாயைக் கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு நெட்சின் புதிய முறை உதவும்.

நெட்ஸ் வெளியிட்ட செய்தி அறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் சில்லறை வர்த்தகர்கள், சிகை அலங்காரக் கடைகள், உணவு, பானக் கடைகள் போன்றவை பலனடையும் என்று நெட்ஸ் குறிப்பிட்டது.

வர்த்தகங்களுக்கு உதவும் தீர்வுகள் உள்ள கட்டண முறைகளை வழங்கும் முயற்சிகளை நெட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தப் புதிய முறை அத்தகைய முயற்சிகளில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

பொதுவாக நேரடிப் பரிவர்த்தனை இடம்பெறும்போது கட்டண இயந்திரம் (பேமென்ட் டர்மினல்), ரொக்கம் வைக்கப்படும் இயந்திரம், பற்றுச்சீட்டை அச்சிடும் இயந்திரம் ஆகியவை இருக்கும். அவற்றை ஒன்றிணைக்க வர்த்தகங்கள் நேரம் செலவிட வேண்டியிருக்கும். அதனால் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் சூழல் உருவாகும் என்று நெட்ஸ் சொன்னது.

இப்போதோ ஒருங்கிணைக்கப்பட்ட முறை இருப்பதால் சிறிய வர்த்தகங்கள் அவ்வாறு செய்யத் தேவையிருக்காது என்பதைச் சுட்டிய நெட்ஸ், நிறுவனங்கள் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டது.

“சவாலான மனிதவளச் சூழலில் சிறிய நிறுவனங்கள் போட்டித்தன்மை மிகுந்த சூழலுக்கு ஏற்றவாறு செயல்படக் கூடுதல் ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும்.

“கட்டண முறைகளில் தீர்வுகள் இடம்பெறுவதன் மூலம் உருவாகும் தானியக்க, சுய சேவை அம்சங்கள் மிகச் சிறிய வர்த்தகங்கள் ஆக்கபூர்வமான முறையில் இயங்க வகைசெய்கின்றன. அதனால் வாடிக்கையாளர்கள் காத்திருக்கவேண்டிய நேரம் குறையும்,” என்று நெட்ஸ் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!