சாப்பிட்டுவிட்டு கட்டணம் செலுத்தாமல் சென்றுவிடும் சில வாடிக்கையாளர்கள்: உணவகத்துக்கு இழப்பு

இந்தோனீசிய சைவ உணவகமான ‘வாருங் ஜோ’ மெக்பர்சன் வட்டாரத்தில் செயல்படத் தொடங்கி நான்கு மாதங்கள்தான் ஆகின்றன.

ஆனால், அக்கடையில் உணவருந்திவிட்டு கட்டணம் செலுத்தாமல் சில வாடிக்கையாளர்கள் வெளியேறிவிட்டதால் உணவகத்துக்குப் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 2) ஃபேஸ்புக்கில் பதிவிட்ட அந்த உணவகம், அன்றைய தினம் காலை சாப்பிட்டுவிட்டு கட்டணம் செலுத்தாமல் சென்றுவிட்ட இரு வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிக்க உதவி கோரியதாக சீன நாளிதழான ஷின் மின் செய்தி வெளியிட்டது.

அவ்விரு வாடிக்கையாளர்கள் உணவகத்தில் அமர்ந்திருப்பதையும் அவர்கள் செலுத்தத் தவறிய $61.90 கட்டணத்தையும் அப்பதிவில் இடம்பெற்ற புகைப்படம் காட்டியது. பின்னர் அப்பதிவு நீக்கப்பட்டுவிட்டது.

அவ்வாடிக்கையாளர்கள் திட்டமிட்டு வேண்டுமென்றே இதைச் செய்தனரா அல்லது கட்டணம் செலுத்த உண்மையிலேயே மறந்துவிட்டனரா என்பது பற்றி தமக்குத் தெரியவில்லை என்றார் ஹுவாங் எனும் பெயருடைய அந்த உணவக மேலாளர்.

அந்த உணவகம் கடந்த ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டதிலிருந்து ஐந்தாவது முறையாக இத்தகைய சம்பவம் நிகழ்ந்தது.

ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர்கள் செலுத்தத் தவறிய கட்டணத்தின் மதிப்பு தலா $20க்கும் $70க்கும் இடைப்பட்டிருக்கும். மொத்தமாகச் சேர்த்து, அந்த உணவகத்துக்கு ஏறக்குறைய $300 இழப்பு ஏற்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் செலுத்தத் தவறிய முதல் கட்டணத்தை உணவக உரிமையாளர் ஏற்றுக்கொண்டதாக ஹுவாங் தெரிவித்தார். ஆனால், அடுத்தடுத்த முறை கட்டணங்களை தாமும் சக உணவக ஊழியர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்ததாக அவர் சொன்னார்.

“இது சிறிய தொகையன்று. வாடிக்கையாளர்கள் சார்பில் கட்டணம் செலுத்தி எங்களுக்கு சோர்வு ஏற்பட்டுவிட்டது,” என்றார் அவர்.

முன்னதாக, உணவு பரிமாறப்படுவதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் அதற்குக் கட்டணம் செலுத்தும் நடைமுறை நடப்பில் இருந்தது. ஆனால், மேலும் உணவு ஆர்டர் செய்ய நினைக்கும்போது தங்களுக்குச் சிரமமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் பலர் கூறியிருந்ததை ஹுவாங் சுட்டினார்.

எனவே கியூஆர் குறியீடு மூலம் வாடிக்கையாளர்கள் உணவு ஆர்டர் செய்யும் புதிய செயல்முறையை உணவகம் கடைப்பிடித்தது. உணவருந்திய பிறகு காசாளரிடம் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தத் தவறிய ஆக அண்மைய சம்பவத்தின்போது உணவகத்தில் நான்கு ஊழியர்கள் இருந்ததாக ஹுவாங் சொன்னார். அப்போது உணவகத்தில் சில வாடிக்கையாளர்கள் மட்டுமே இருந்தனர்.

ஆனால், கடை ஊழியர்களின் கவனம் சற்று குறையும் தருணத்தில், கட்டணம் செலுத்தாமல் வாடிக்கையாளர்கள் புறப்படுவதைக் கவனிக்கத் தவறினர்.

“பரபரப்பான சூழலில் நாங்கள் வேலை இருக்கும்போது நிலவரம் இன்னும் கடினமாகிறது,” என்று ஹுவாங் கூறினார்.

என்றாலும், கடைசி சம்பவம் நல்லதொரு முடிவை எட்டியது.

உணவகம் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட மற்றொரு பதிவில், வாடிக்கையாளர்கள் தன்னை தொடர்புகொண்டு உணவுக்காக கட்டணம் செலுத்தியதாகத் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!