ஓமான் அறிவார்ந்த நகரத்தில் ‘சிங்கப்பூர் வீதி’

ஓமான் அறிவார்ந்த நகரத்தில் ‘சிங்கப்பூர் வீதி’

1 mins read
f37f32dc-a9f5-48e6-8af7-de4a70000cd0
சிங்கப்பூர் வந்துள்ள ஓமான் சுல்தான் ஹைதம் தாரிக் இஸ்தானாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தையும் பிரதமர் லீ சியன் லூங்கையும் சந்தித்தார். - படம்: எஸ்பிஎச் மீடியா

ஓமானின் அறிவார்ந்த நகரத்தில் சிங்கப்பூர் வீதி இடம்பெறும் என்று சிங்கப்பூர் வந்துள்ள ஓமான் சுல்தான் ஹைதம் தாரிக் தெரிவித்து உள்ளார்.

சிங்கப்பூரின் கம்போங் கிளாம் பகுதியில் மஸ்கட் ஸ்திரீட் உள்ளதுபோல ஓமான் தலைநகர் மஸ்கட்டிலும் சிங்கப்பூர் பெயரில் வீதி அமைகிறது.

சுல்தான் ஹைதம் சிட்டி என்ற பெயரில் உருவாகி வரும் அறிவார்ந்த நகரத்தில் கிட்டத்தட்ட 100,000 குடியிருப்பாளர்களைக் குடியமர்த்தத் திட்டமிடப்பட்டு உள்ளது.

மூன்று நாள் சிங்கப்பூர் வருகை மேற்கொண்டுள்ள சுல்தான் ஹைதமுக்கு அவ்வருகையின் இரண்டாம் நாளான டிசம்பர் 14ஆம் தேதி இஸ்தானாவில் அரசு விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது. அவ்விருந்தின்போது அவர் சிங்கப்பூர் வீதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

சிங்கப்பூருக்கும் ஓமானுக்கும் இடையில் உன்னதமான உறவுகள் இருப்பதாகக் குறிப்பிட்ட சுல்தான் ஹைதம், இரு அரசாங்கங்களையும் சேர்ந்த பல்வேறு தரப்புகளுடன் நடத்திய ஆலோசனை தமக்கு மிகவும் மனநிறைவைத் தந்ததாக தமது உரையில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்