பாலஸ்டியரில் விபத்துக்குள்ளான காவல்துறை கார்; இருவர் மருத்துவமனையில்

பாலஸ்டியரில் விபத்துக்குள்ளான காவல்துறை கார்; இருவர் மருத்துவமனையில்

1 mins read
cccef109-a479-41b3-a83b-98f22e1564bc
சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்தது. - படங்கள்: ரோட்ஸ்.எஸ்ஜி/ ஃபேஸ்புக்
Google News Preferred Icon

பாலஸ்டியரில் அடையாளம் இல்லாத காவல்துறை காரும் ஒரு மோட்டார்சைக்கிளும் விபத்துக்குள்ளாயின.

புதன்கிழமையன்று நிகழ்ந்த இச்சம்பவத்தில் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

வெள்ளை கார் ஒன்று நடைபாதைக்கு மேல் உள்ள வேலிமீது மோதி சாக்கடைக்குள் விழுந்த காட்சி பதிவான படங்களும் காணொளிகளும் இணையத்தில் பகிரப்பட்டன. காரின் பின்னணியில் ‘வாம்போ மாக்கான் பிளேஸ்’ உணவங்காடிச் சந்தை தென்பட்டது.

அடையாளம் இல்லாத காவல்துறை கார்களில் பொதுவாகக் காணப்படும் காவல்துறை சின்னம் போன்றவை இருக்காது.

புதன்கிழமை மாலை ஐந்து மணி அளவில் இந்த விபத்து குறித்துத் தங்களுக்குத் தகவல் வந்ததாக காவல்துறை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தது. விபத்து 90 வாம்போ டிரைவில் நிகழ்ந்தது.

காரில் இருந்த இரண்டு பெண்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர்கள் சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. ஒரு பெண்ணுக்கு வயது 21, மற்றொருவருக்கு 66 வயது.

காரை ஓட்டிய 63 வயது நபர் விசாரணையில் உதவி வருவதாகக் காவல்துறை கூறியது.

விபத்தில் ஈடுபட்ட 36 வயது மோட்டார்சைக்கிளோட்டிக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்விபத்துசாலை விபத்துகார்காவல்துறை